50+ கிமீ மைலேஜ்! வெறும் 1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்! போட்டி நிறுவனங்கள் தலை தெறிச்சு ஓட போறாங்க!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)தன்வசம் வைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாக ஹண்டர் 350 திகழ்ந்து கொண்டுள்ளது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், 18,373 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Hunter 350 Side View

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் வெறும் 14,091 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில், 4,282 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 30.39 சதவீத வளர்ச்சி ஆகும்.

வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில் மட்டுமல்லாது, மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டிலும் கூட, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 16,261 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Hunter 350

ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஜூலை மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 18,373 ஆக உயர்ந்துள்ளது. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின் வந்த ஜூலையில், 2,112 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 12.99 சதவீத வளர்ச்சி ஆகும்.

இப்படி விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வரும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 90 சதவீதம் எரிபொருள் மற்றும் ஆயில் இருக்கும்போதே, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் எடை வெறும் 181 கிலோ மட்டுமே. எனவே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை கையாள்வது மிகவும் எளிமையான ஒரு விஷயமாக இருக்கிறது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் இதுதான். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,49,900 ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 1,81,750 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ஹண்டர் 350 பைக்கிடம் இருந்து மற்றொரு பைக் தட்டி பறிக்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய 250 சிசி ஹைப்ரிட் பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் இது ஹைப்ரிட் பைக் என்பதால், ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் கையாள்வதற்கு மிகவும் எளிமையான ஒரு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, August 25, 2025, 14:25 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report july 2025 30 39 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+