இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக் கெடச்சா யாருதான் வாங்காம விடுவா! ஷோரூம்ல கூட்டம் அலை மோதுது!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் என்ற பெருமையை ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 16,261 ஹண்டர் 350 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

2025 Royal Enfield Hunter 350 Side Design

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 15,609 ஆக மட்டுமே இருந்தது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 652 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 4.18 சதவீத வளர்ச்சி ஆகும். கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டாலும் கூட, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Royal Enfield Hunter 350

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம், 15,972 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கையானது, அதன் பின் வந்த ஜூன் மாதத்தில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி 16,261 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 289 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 1.81 சதவீத வளர்ச்சி ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1,49,900 ரூபாயாக மட்டுமே இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் வேரியண்ட்டின் விலை 1,81,750 ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு 350 சிசி தயாரிப்பாக கருதப்படுவதால்தான், இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350), ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) மற்றும் ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற 350 சிசி பைக்குகளுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ராயல் என்பீல்டு ஹண்டர் 350 கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 31, 2025, 23:13 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report june 2025 4 18 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+