வெறும் 1.37 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்கா! டிவிஎஸ் எக்ஸ்எல் மாதிரி ஈஸியா ஓட்டலாம்! மைலேஜ் வேற லெவல்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமை ஹண்டர் 350 பைக்கிற்கு உண்டு.

இந்த சூழலில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 20,792 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Royal Enfield Hunter 350 Side View

ஆனால் அதற்கு முந்தைய அக்டோபர் மாதம், அதாவது நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 21,823 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 1,031 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 4.72 சதவீத வீழ்ச்சி ஆகும்.

மாதாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, வருடாந்திர ரீதியிலான ஒப்பீட்டில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், 15,229 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Royal Enfield Hunter 350

இந்த எண்ணிக்கை, நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, 20,792 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 5,563 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 36.53 சதவீத வளர்ச்சி ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இதுதான் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 1,37,640 ரூபாயாக மட்டும்தான் இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 1,66,883 ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், மிகவும் விலை குறைவானது மட்டுமல்ல. இது மிகவும் இலகுவானதாகவும் உள்ளது. 90 சதவீத பெட்ரோல் மற்றும் ஆயில் இருக்கும்போது, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் எடை வெறும் 181 கிலோவாக மட்டுமே இருக்கும். எனவே இதை கையாள்வதும் மிகவும் எளிமையான ஒரு விஷயமாகதான் இருக்கும்.

அத்துடன் உகந்த சூழல்களில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கிடம் இருந்து, ஒரு லிட்டருக்கு 36.2 கிலோ மீட்டர் மைலேஜை (Mileage) எதிர்பார்க்க முடியும் என, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக், மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில், அதே நேரத்தில் கையாள்வதற்கு மிகவும் எளிமையான ஒரு ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அத்துடன் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 போன்ற பைக்குகளுக்கும் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 30, 2025, 23:23 [IST]
English summary
Royal enfield hunter 350 sales report november 2025 36 53 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+