வெறும் 1.37 லட்சத்துக்கு மைலேஜை வாரி வழங்கும் ராயல் என்பீல்டு பைக்கா! வெயிட் இருக்காது! ஓட்றதும் ஈஸி!
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், ஒவ்வொரு மாதமும் இதன் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.
இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 21,801 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 17,406 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 4,395 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது 25.25 சதவீத வளர்ச்சி ஆகும். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் ஆகும். தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1,37,640 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1,66,883 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.
செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில், 349 சிசி ஜே-சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதிகளில், முறையே 300 மிமீ மற்றும் 270 மிமீ டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் 13 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் உகந்த சூழல்களில், ஹண்டர் 350 பைக்கில், ஒரு லிட்டருக்கு 36.2 கிலோ மீட்டர் மைலேஜை எதிர்பார்க்கலாம் என ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரோட்ஸ்டர் ரகத்தை சேர்ந்த ஒரு மோட்டார்சைக்கிள் ஆகும். குறைந்த எடை (இதுதான் மிகவும் எடை குறைவான 350 சிசி பைக்) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நகர சாலைகளில் ஓட்டுவதற்கும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் மிகவும் ஏற்றதாக இருக்கும். மிகவும் குறைவான விலையில், ஓரளவிற்கு நல்ல மைலேஜ் தரக்கூடிய ராயல் என்பீல்டு பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹண்டர் 350 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மற்ற 350 சிசி பைக்குகளான கிளாசிக் 350, கோவன் கிளாசிக் 350, புல்லட் 350 மற்றும் மீட்டியோர் 350 போன்ற பைக்குகளுக்கு எல்லாம், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








