சென்னையில் நடந்த ஹண்டர்ஹூட், போகாதவங்க நிறைய மிஸ் பண்ணிட்டீங்க!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 13ம் தேதி சென்னையில் ஹண்டர் ஹூட் என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தது. இதை ஒரு ஸ்டிரீட் கல்சர் திருவிழாவாக நடத்தியிருந்தது. இதற்கு முன்னர் டில்லி, மும்பை ஆகியர நகரங்களில் இந்தாண்டு துவக்கத்தில் இந்த திருவிழா நடத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையிலும் இது நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எப்பொழுது தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த அவ்வப்போது இப்படியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். இதன்படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது தனது ஹண்டர் ரசிகர்களுக்காக இந்தாண்டு துவக்கத்தில் ஹண்டர் ஹூட் என்ற நிகழ்ச்சியை மும்பை மற்றும் டில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை கடந்த 13ம் தேதி சென்னையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தனது அப்டேட் செய்யப்பட்ட ஹண்டர் 350 பைக்கை காட்சிப்படுத்தும் தளமாகவும் அந்நிறுவனம் பயன்படுத்திக்கொண்டது. இதில் புதிய கலர் ஆப்ஷனாக ரியோ ஒயிட், டோக்யோ பிளாக், லண்டன் ரெட், கிராஃபைட் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டின் புதிய கம்யூனிட்டி உருவா்கப்பட்டது. இதில் ரைடர்கள், ஆர்டிஸ்ட், ஸ்கேட்டர்கள், கிரியேட்டர்கள் கலந்து கொண்டனர். இங்கு லைவ் மியூசிக், கிராஃபிட்டி, பிஎம்எக்ஸ், டான்ஸ் பேட்டில், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இது மட்டுமல்லமல் லைவ் மியூசிக்ககிற்கு ஏற்ற ரேப் பேட்டி,ஹிப்ஹாப் டேன்சர், உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் எனர்ஜியாக இது நடத்தப்பட்டது.

ஸ்டிரீட் கல்சர் உடன் இணைந்த வகையில் இநத நிழ்ச்சி திட்டமிட்ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரபல பாடகரான அசல் கோளாரு கலந்து கொண்டார். இது போக டிஜே பென்கி கலந்து கொண்டார். இது அதிக பாஸ் கொண்ட இசைகளை உருவாக்குவதில் பிரபலமானவர். இது போக ரேப்பர் மற்றும் கம்போசர் அறிவு, ஹிப் ஹாப் ஆர்டிஸ்ட் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஐக்கிபெரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது போக சென்னை கானா கைப்பர் குழுவினர், சென்னை ஸ்கேட் பேர்டு கம்யூனிட்டி, விக்னேஷ் ராகவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்கேட்போர்டு நிகழ்ச்சிகளை நடத்தினர். இவர்கள் ஹன்டர் பைக்கில் ஒரு கஸ்டம் மாதிரியை யும் காட்சிப்படுத்தினர். கன்வார் கஸ்டம்ஸ் நிறுவத்தினர் "திருச்சூர் கபே ரேஸர்" ென்ற பெரயிரல் கேரளாவின் பாராம்பரியத்தை கொண்டாடும் வகையில், சிவபெருமான் மற்றும் கதக்களி ஆட்டம் ஆகியவறை கலந்த ஒரு வடிவத்திலும், கோஹினூர் மற்றும் ஐதராபாத் நகர வரலாற்றை பாராற்றம் விதமாகவும் கையால் செய்யப்ட்ட கஸ்டமைஸ்டு வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பைக், மியூசிக், ஸ்டிரீட் கல்சர் ஆகியவற்றை பறை சாற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹண்டர் 350 பைக்கில் உள்ள டிஎன்ஏ, எந்த அளவிற்கு அதன் கம்யூனிட்டி உடன் இணைந்துள்ளது. இந்தியாவின் துடிப்பான ஸ்டிரீட் கல்சரையும் இங்கே நம்மால் காண முடிந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்க இப்படியாக நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துவார்கள். அதன்படி ஹண்டர் ஹூட் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது வரவேற்க தக்கது தான். இதனால் மக்கள் உற்சாகமாக இருப்பார்கள். ராயல் என்ஃபீல்டு கம்யூனிட்டி விரிவடையும்.


Click it and Unblock the Notifications








