உலகத்துலயே 100 பேர் மட்டும் தான் இந்த பைக்கை வாங்க முடியும்! விலையும் கம்மி தான்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கஸ்டம் மோட்டார்சைக்கிள் கட்டும் நிறுவனமான ICON மோட்டோஸ்போர்ட்ஸ் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஷாட்கன் 650 இன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் பைக், EICMA 2024 மற்றும் மோட்டோவர்ஸ் 2024 இல் காட்சிப்படுத்தப்பட்ட ICON இன் படைப்பான 'ஆல்வேஸ் சம்திங்’ இல் இருந்து ஈர்ப்பைப் பெறுகிறது. இந்த பைக் தனித்துவமான அழகியல் அம்சங்கள் மற்றும் செயல்திறன் அம்சங்களை இணைத்து, அதை ஒரு தனித்துவமான மாடலாக மாற்றுகிறது.

இந்த பிரத்தியேக ஷாட்கன் 650 பைக் மொத்தமே 100 பைக்குகள் மட்டுமே உலகளவில் கிடைக்கும். இது ட்ரிபிள்-டோன் பெயிண்ட் ஸ்கீம் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரேஸ் நிற கிராபிக்ஸைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் வடிவமைப்பு தங்கம் நிறத்தில் கட் கொண்ட ரிம்கள், நீலம் நிற ஹைலைட்டுகள் மற்றும் ஒருங்கிணைந்த லோகோவுடன் கூடிய சிவப்பு நிற சீட் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரெண்ட் மிரர்ஸ் அதன் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு ஒரு ஆக்ரோஷமான தோற்றத்தை சேர்க்கிறது.

Royal Enfield Shotgun 650

இந்த லிமிடெட் எடிஷன் வாகனம் சர்வதேச அளவில் வெளியிடப்படும். இந்திய வாடிக்கையாளர்கள் 2025 பிப்ரவரி 6 முதல் RE ஆப் மூலம் பதிவு செய்யலாம். ஆசிய பசுபிக் நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ரைடர்கள் ராயல் என்ஃபீல்டு வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்யலாம். அதன் பிரத்தியேகத்தன்மை காரணமாக ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் 25 பைக்குகள் மட்டுமே கிடைக்கும்.

2025 பிப்ரவரி 12 அன்று மதியம் 3 மணி GMT க்கு பதிவுகள் தொடங்குகின்றன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் முதல் 25 வாடிக்கையாளர்கள் பதிவு செய்து பைக்கை வாங்க முடியும். ரூ. 4,25,000 (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) என்ற விலையில், இந்த பைக்கு 648 சிசி இணையான டுயல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இது 46.3 ஹெச்பி பவர் மற்றும் 52.3 என்எம் டார்க் திறனை ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலம் வழங்குகிறது.

Royal Enfield Shotgun 650

ராயல் என்ஃபீல்டு இந்த சிறப்பு எடிசன் சர்வதேச கஸ்டம் பைக் கலாச்சாரத்துடன் தனது ஆழமான தொடர்பை பிரதிபலிக்கிறது என்று வலியுறுத்துகிறது. இந்த லிமிடெட் எடிஷனை வாங்குபவர்கள். ICON இன் பிரத்தியேகமான ஸ்லேப்டவுன் இன்டர்செப்ட் RE ஜாக்கெட்டையும் பெறுவார்கள். இந்த ஜாக்கெட் லெதர் அப்ளிகேஷன் மற்றும் விரிவான எம்பிராய்டரி மூலம் உருவாக்கப்பட்டது

ராயல் என்ஃபீல்ட்டின் தலைவர் - கஸ்டம் & மோட்டார்ஸ்போர்ட், அட்ரியன் செல்லர்ஸ், இந்த கூட்டுறவைப் பற்றி குறிப்பிட்டார்: "லிமிடெட் எடிஷன் ஷாட்கன் 650 க்கான ICON மோட்டோஸ்போர்ட்சுடன் எங்கள் கூட்டுறவு, ஷாட்கன் 650 இன் கஸ்டம் சாத்தியங்களை எடுத்துக்காட்டுகிறது. கஸ்டம் கட்டமைப்பின் கலைத்திறன் மற்றும் உணர்ச்சியை கொண்டாடுகிறது,

Royal Enfield Shotgun 650

அதே நேரத்தில் ராயல் என்ஃபீல்டுட் மோட்டார்சைக்கிள்களால் சாத்தியமானவற்றின் எல்லைகளை அடுத்த கட்டத்திற்கு தள்ளுகிறது. 'ஆல்வேஸ் சம்திங்’ பை ICON என்பது ஒரு முத்தான படைப்பு, மேலும் இதன் ஆர்வத்தையும் ஸ்டைலயும் உலகெங்கிலும் உள்ள எங்கள் ரைடர் சமூகத்திற்கு கொண்டுவருவதற்காக இந்த எடிசனை நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்." என கூறினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிமிடெட் எடிஷன் ஷாட்கன் 650, ராயல் என்ஃபீல்ட்டின் புதுமையான லுக்கை காட்டுகிறது, அத்துடன் மோட்டார்சைக்கிள் கஸ்டமைசேஷனில் அதன் பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. அதன் தனித்துவமான வடிவமைப்பு கூறுகள் மற்றும் பிரத்தியேகமாக கிடைக்கும் தன்மை கொண்ட இந்த பைக், உலகெங்கிலும் உள்ள ஆர்வலர்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற சொத்தாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 6, 2025, 15:45 [IST]
English summary
Royal Enfield has unveiled a limited edition Shotgun 650 in collaboration with ICON Motosports, featuring unique design elements and performance characteristics. Only 100 units will be available globally, with bookings opening on February 12, 2025.
மேலும்... #royal enfield #motorcycles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X