புல்லட் எல்லாம் ஓரம் போ! இனி ஊரே இந்த வண்டிய தான் வாங்கப்போகுது!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது 2025 மீட்டியோர் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மிட்சைஸ் க்ரூஸர் பைக் ஆகும். இந்த பைக் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு தான் ஆறிமுகமாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக விற்பவனையாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 65 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் இந்த பைக்கை வாங்கியுள்ளனர். இந்த புதிய அப்டேட் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் பைக்கை பொருத்தவரை ரூ1,95,762 என்ற விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அதிகாரப்பூர்வமான விற்பனை வரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்று முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருவதால் இந்த பைக்கிற்கு 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறது. இது 350 சிசிக்கு குறைவான விலையில் விலைக்கு வருவதால் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது.

Royal Enfield Meteor 350

இந்த பைக் ஃபயர்பால், ஸ்டெல்லர், அரோரா, சூப்பர் நோவா ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்பவனையாகி வருகிறது. இதன் விலையை பொருத்தவரை ஃபயர்பால் வேரியன்ட் ரூ1,95,762, ஸ்டெல்லர் வேரியன்ட் ரூ2,03,419 கேரளாவில் மட்டும் ரூ1,99,990, அரோரா வேரியன்ட் ரூ 2,06,290, சூப்பர் நோவோ வேரியன்ட், ரூ2,15,883 ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.இந்த பைக்கில் ஃபயர்பால் வேரியன்ட் ஆரஞ்ச் மற்றும் கிரே நிறங்களிலும், ஸ்டெல்லர் மேட் கிரே, மற்றம் மெரைன் ப்ளூ ஆகிய நிறங்களிலும், அரோரா வேரியன்ட் ரெட்ரோ கிரீன், அரோரா ரெட் ஆகிய நிறங்களிலும், சூப்பர் நோவா கருப்பு நிறத்திலும் கிடைக்கிறது.

இந்த பைக்கில் அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களை பொருத்தவரை எல்இடி ஹெட்லைட் மற்றும் டிரிப்பர் நேவிகேஷன் பாட் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இது ஃபயர்பால் மற்றும் ஸ்டெல்லர் வேரியன்ட்களில் உள்ளது. இது போக எல்இடி இண்டிகேட்டர், டைப் சி யூஎஸ்பி பாஸ்ட் சார்ஜிங் போர்ட், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது போக அட்ஜெஸ்டபிள் பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் சூப்பர் நோவா அரோரா ஆகிய வேரியன்ட்களில் உள்ளது.

Royal Enfield Meteor 350

இதில் சூப்பர் நோவா வேரியன்டில் குரோம் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. அரோரா வேரியன்டில் ஹெரிட்டேஜ் ரெட்ரோ ஷேடு லுக் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டெல்லர் வேரியன்ட் போல்டான வைபரன்ட் டோனில் உள்ளது. இந்த வாகனத்ின் பெர்ஃபார்மென்ஸை பொருத்தவரை 349 சிசி ஜே சிரீஸ் ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 20.2 பிஎச்பி பவரை 6100 ஆர்பியும்மிலும், 27 என்எம் டார்க் திறனை 4000 ஆர்பிஎம்மிலும் வழங்கும் திறன் கொண்டது. இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் க்ரூஸர் ஃபிரெண்ட்லி பைக்காக வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரிலாக்ஸான ரைடிங் பொசிஷன் இருக்கிறது. சிட்டி ஹேண்டிலிங் ஸ்மூத்தாகவும், ஹைவேயில் ஸ்டேபிளானாகவும் ஹேண்டில் செய்ய முடிகிறது. இந்த பைக்கிற்கு ஆக்ஸசரீஸ்களாக ஜென்யூன் மோட்டார் சைக்கிள் ஆக்ஸசரீஸ்கள் 2 கிட்கள் வழங்கப்பட்டுகிறது.

Royal Enfield Meteor 350

இதில் அபர்ன் கிட்டில் பிளாக் டிராக் ஹேண்டில் பார், லோ ரைடர் சீட், டின்டெட்ட ஃபிளை ஸ்கிரீன், கருப்பு கண்ணாடி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மற்றொரு கிட்டாக கிராண்ட் டூரர் கிட்டில் டூரிங் சீட், பிரிமியம் பன்னியர்ஸ், லாங் ஹவுல் ரெயில்ஸ், எல்இடி ஃபாக் லைட்டுகள், டீலக்ஸ் ஃபூட்பெக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கிற்கு ஸ்டாண்டர்டாக 3 ஆண்டுகள் அல்லது 30,000 கி.மீ வாரண்டி கிடைக்கிறது. இதை கூடுதலாக 4 ஆண்டுகள் அல்லது 40,000 வரை நீடித்து 7 ஆண்டு வாரண்டி உடன் பயன்படுத்த முடியும். இதில் ரோடு சைடு அசிஸ்டென்ஸ் பேக்கேஜ் உண்டு

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு ஒரு மவுசு இருக்கிறது. இந்நிலையில் தனது மீட்டியோர் 350 பைக்கை அப்டேட் செய்து மக்கள் அதிகம் பைக் வாங்கும் காலமாக ஜிஎஸ்டி குறைப்புநாளில் இதை விற்பனைக்கு கொண்டு வருவதால் பலர் இந்த பைக்கை வாங்கி இதன் விற்பனையை பெருக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2025, 7:41 [IST]
English summary
Royal enfield meteor 350 launched price 1 95 lakh
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X