பார்த்தா கண் கூசும் கலரில் ராயல் என்ஃபீல்டு பைக்! விலை ரொம்ப கம்மிதான்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மீட்டியோர் 350 பைக்கில் சன் டவுணர் எடிசனிற்கான புக்கிங்கை தனது டீலர்ஷிப் மூலம் துவக்கியுள்ளது. இந்த எடிசன் பைக் சூரிய அஸ்தனம் ஆகும் போது தெரியும் ஆரஞ்சு நிறத்தை இஸ்பயர்டு செய்து ஸ்பெஷல் கலரில் வெளியிட்டுள்ளது. இது காண்பவர்கள் கண்ணை சுண்டிஇழுக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோவாவில் நடந்து வரும் மோட்டோவெர்ஸ் 2025 நிகழ்ச்சியில் பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டும் அறிமுகப்படுத்தியுள்ள வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் புதிய லிமிடெட் ரன் வெர்னாக அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் க்ரூஸர் பைக்கான மீட்டியோ 350 பைக்கின் சன் டவுனர் என்ற ஸ்பெஷல் எடிசன் பைக்கை உருவாக்கியுள்ளது.

Royal Enfield Meteor 350 Sundowner Edition

இந்த நிகழ்ச்சியில் மீட்டியோ பைக் சுமார் 5 லட்சம் பைக்குகள் சர்வதேச அளவில் விற்பனையானதை கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சூரிய அஸ்தனமத்தில் தெரியும் ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டூரிங் சீட்கள் நீண்ட தூர பயணத்தறி்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ளுது. பின்பக்கம் அமர்ந்து செல்லும் பயணிக்கு சோர்வு தெரியக்கூடாது என்பதற்காக பின்பக்க சீட்டில் ஒரு பேக் ரெஸ்ட் வடிவமைக்கப்பட்டுள்ளுது.

இந்த காரில் 3 நேவிகேஷன் பாட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சுலபமாக இருக்கும். இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஓஎச்சி ஃப்யூயல் இன்ஜெக்டட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளுது. இது 20 பிஎச்பி பவரையும் 27 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் அம்சங்கள் உள்ளது.

Royal Enfield Meteor 350 Sundowner Edition

இந்த பைக்கில் கோமொம்மோரேட்டிவ் பேட்ஜ் எக்ஸ்க்ளூஸிவ் எடிசனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ2,18,882 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளுது. இது சென்னை எக்ஸ் ஷோரூம் விலை தான். இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது ராயல் என்ஃபீல்டு ஷோரூம்களில் துவங்கியுள்ளது.

இந்த பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக் வீல்கள், எல்இடி லைட்டிங்ல, அட்ஜெஸ்டபிள் லிவர்கள், யூஎஸ்டி டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. இந்த பைக்கில் ட்வின் டவுண் டியூப் ஸ்பைன் ஃபிரேம் பயன்படுத்தப்பைட்டுள்ளுது. சஸ்பென்சனிற்காக முன்பக்கம் டெலஸ்கோபிக் ஜோர்க் 130 மிமீ அளவில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்வின் ஷாக் அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஸ்டெப் அட்ஜெஸ்மென்ட் இருக்கிறது. இந்த காரில் முன்பக்கம் 300 மிமீ மற்றும் பின்பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் மொத்த உயரம் 765 மிமீ ஆகும்.

Royal Enfield Meteor 350 Sundowner Edition

இந்த சன்டவுனர் ஆரஞ்ச் எடிசன் மீட்டியோர் 350 பைக்குடன் இ்நத நகிழ்வின் போது அந்நிறுவனம் புல்லட் 650, ஹிமாலயன் 450 மானா பிளாக் எடிசன், ஃபிளையின் பிளே எஸ்6 ஸ்கிரம்பிளர் ஆகிய பைக்குகளை காட்சிப்படுத்தியுது. இந்தபைக்குகள் எல்லாம் வரிசையாக விற்பவனைக்கு வந்து அதன் டெலிவரிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டோவெர்ஸ் நிகழச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.இதில் பல புதிய தயாரிப்புகள் வெளியாகியுள்ளன. நிச்சயம் இது மக்களின் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கலாம். இ்நத வாகனங்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெறும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 22, 2025, 18:00 [IST]
English summary
Royal enfield meteor 350 sundowner edition launched price 218 lakh
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X