கோவாக்கு கிளம்ப டைம் வந்துடுச்சு! ராயல் என்ஃபீல்டு பைக் வச்சிருக்கிறவங்க எல்லாம் இதுக்கு தான் வெயிட்டிங்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக கோவாவில் உள்ள வாகடார் பகுதியில் 2025ம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒவ்வொர ஆண்டு தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த மோட்டோ - கல்ச்சுரல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழச்சியில் ராயல் என்ஃபீல்டு ரைடர்கள், ரசிகர்கள், ஆர்வலர்கள்,கலைஞர்கள் என பலர் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த 2025ம் ஆண்டிற்கான நிகழ்ச்சி வரும் நவம்பர் மாதம் 21ம் தேதிமுதல் 23ம் தேதி வரை நடக்கிறது.

Royal Enfield Motoverse 2025

இந்த நிகழ்ச்சியில் கஸ்டம் பில்டு செய்யப்பட்ட வாகனங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் இதில் புதிய மற்றும் அடுத்து ராயல் என்ஃபீல்டு பிராண்டில் வரவுள்ள தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஃபிளையிங் பிளே என்ற வாகனமும், ஹிமாலயன் எலெக்ட்ரிக் ஆகிய வாகனங்களும் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் ராயல் என்ஃபீல்டு கம்யூனிட்டி மக்களுக்காக புதிய தயாரிப்புகள் மற்றும் அறிமுகங்கள் இதில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதில் சிறப்பு அம்சமாக டிரிட் டிராக் செட்டப் செய்ய்படவுள்ளது. இதில் இதில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு நடக்கிறது. முக்கியமாக ஒர்க் ஷாப், கலெக்ஷன் காட்சிகள், அட்வெஞ்சர் ஈவென்ட்கள் நடக்கவுள்ளது.

Royal Enfield Motoverse 2025

கடந்தாண்டு நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமுார் 30 ஆயிரம் பேர் பகலந்து கொண்டனர். இந்தாண்டு அதைவிட எண்ணிக்கை அதிமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமல்ல மற்ற நாடுகளில் இருந்து கூட மக்கள் வருகிறா்ரகள். கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சில் 12 நாடுகளில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சிக்கன புக்கிங் டிஸ்டிரிட் ஆப் மூலம் செய்ய முடியும். முதலில் இந்த டிக்கெட்டை புக் செய்பவர்களுக்கு 2499 என்ற விலையில் பாஸ்களை பெற முடியும். 5 டிக்கெட்களை மொத்தமாக புக் செய்தால் ஒரு டிக்கெட் ரூ2399 என்ற விலையிலும், 10 டிக்கெட்களை மொத்தமாக புக் செய்தால் ஒரு டிக்கெட் விலை ரூ2299 என்ற விலையிலும் புக்கிங் செய்ய முடியும்.

Royal Enfield Motoverse 2025

இந்தி நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ரைடர்கள் பங்கேற்றவுள்ளனர். அவர்கள் இங்கு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அட்வெஞ்சர், கஸ்டம் பைக் பில்டிங், ரேலியிங், ஓவர் லேண்டிங், உள்ளிட்ட பல துறையில் உள்ள வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இங்கு ஒர்க் ஷாப், பேனல் மற்றும் இன்ஃபார்மல் எக்ஸ்சேஞ்ச் உள்ளிட்ட விஷயங்கள் நடக்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மியூசிக் நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது. முதன் முறையாக இந்த நிகழ்ச்சியில் அம்ங்கள் ஸ்பிலிட் ஸ்டேஜ் ஃபார்மெட்டில் நடைபெறவுள்ளது. இரண்டு வெவ்வேறு விதமான சூழ்நிலையை இந்த நிகழ்ச்சியில் ஏற்படுத்த விரும்புகிறது. இதில் முக்கிய மேடை, மாலை நேர வைப், அதிக பவர்ஃபுல்லான சூழ்நிலையை கொண்டிருக்கும். மற்றொரு மேடையில் இந்திய பாப் கலாச்சாரம் மற்றும் இந்தியா சார்ந்த விருப்பங்களை கொண்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த நிகழ்ச்சியில் யெல்லோ டைரி, யூஃபோரியா, தாய் குடம் பிரிட்ஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட இசை குழுக்கள் வந்து தங்கள் ஸ்டேஜ் நிகழ்ச்சியை நடத்தப்போகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சிக்கு இந்தாண்டு சுமார் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புக்கிங் துவங்கியுள்ள நிலையில் அடுத்துடுத்து இது குறித்து தெரிவரும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 21, 2025, 11:25 [IST]
English summary
Royal enfield motoverse 2025 registrations open details
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X