சென்னை டூ கலிஃபோர்னியா! ஒட்டு மொத்த உலகையே ஒரே நாளில் கூட வைத்த ராயல் என்ஃபீல்டு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது தனித்துவமான ஒன் ரைடு என்ற நிகழ்வை தொடர்ந்து 14வது ஆண்டாக தற்போதும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பைக் திருவிழா கொண்டாட்டமாக இது மாறியுள்ளது. ஒரு சிறிய ஐடியா இன்று சர்வதேச அளவில் மாறியுள்ளது. சென்னை- கலிஃபோர்னிய என வந்த இந்த ஐடியா குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ராயல்என்ஃபீல்டு நிறுவனம் ஒன்ரைடு என்ற பெயரில் சர்வதேச அளவில் ஒரு நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒரே நாளில் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகள் எந்த நாடுகளில் எல்லாம் நடத்தப்படுகிறதோ அந்த நாடுகளில் எல்லாம் ரைடு ஏற்பாடு செய்யப்படும் ஒரே நாளில் உலகம் முழுவதும் உள்ள ராயல் என்ஃபீல்டு ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் இந்தாண்டு மொத்தம் 60 நாடுகளில் ஏற்பாடு செய்ப்பட்ட 1500 ரைவு நிகழ்வுகளில் மொத்தம் 40,000 பேர் கலந்து கொண்டனர். இந்த ஒன் ரைடு ஒரு குழுவாக மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிளை என்ஜாய் செய்யும் வகையில், வயது வித்தியாசம், கலாச்சா வித்தியாசம், பின்புலம் என எதையும் பாராமல் ரைடு நடத்தப்படுகிறது. இந்த ஒரு நாளில் அத்தனை வேறுபாடுகளையும் களைந்து அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்க இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு ஏகப்பட்ட மக்களை அதிகம் ஈர்க்கிறது. இதில் முதல் முறை பைக் ரைடு செய்பவர்கள், வார விடுமுறைகளில் பைக் ரைடு செய்பவர்கள், பழைய நண்பர்களுடன் பைக் ரைடு செய்பவர்கள் எனபலர் கலந்து கொண்டனர். இந்தாண்டு ரைடு நிகழ்ச்சியில் ஹெல்மெட்கள் வெறும் பாதுகாப்பு கருவிகள் மட்டுமல்ல இது பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து என வலியுறுத்தும் வகையில் ரைடு நடத்தப்பட்டது. இந்த ரைடில் ரைடர்கள், அவர்கள் தனித்துவமாக்கப்பட்ட ஹெமெட்களை பயன்படுத்தினர் அதில் கஸ்டமைஸ்டு ஆப்ஷன்கள், பல காணமுடிந்தது. ஒவ்வொரு ஹெல்மெட்டும் ஒரு கதையை சொல்லும் வகையில் அமைந்திரு்தது.
மேலும் இந்த ரைடு பொறுப்புணர்வுடன் ரைடு செய்வது என்பதை ஒரு தீமாக கொண்டுள்ளது. இதில் பாதுகாப்பான ரூட்டுகள், கம்யூனிட்டி மென்டார்ஷிப், இந்தியாவிற்கான ஹெல்மெட் என பல விஷயங்கள் திட்டமிடப்பட்டது. முக்கியமாக இதை பாதுகாப்பான ரைடான நடத்தி கலந்து கொண்டவர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வீடு திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
இந்த நிகழ்வு கடந்த 2011ம் ஆண்டு தான் துவங்கப்பட்டது. அப்பொழுது வெறும் 14 நாடுகளில் இந்த ரைடு நடத்ததப்பட்டது. ஆனால் வேகமாக 14 ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது 66 நாடுகளில் 41,730 ரைடர்கள் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. இந்த ரைடு குறிப்பிட்ட நாளில் சூரியன் உதயமான நாட்டில் துவங்கி படிப்படியாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒவ்வொரு நாடாக ரைடு நடத்தப்பட்டது.
ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் ரைடர்கள் கலந்து கொள்வது இந்த நிகழ்வு தான். உலகின் மிக முக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. உலக மக்கள் பலர் ஒரே நாளில் ஒரே நோக்கத்திற்காக ஒன்றினைந்து பைக் ரைடில் ஈடுபட்டுள்ளனர். இது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்படியான முன்னெடுப்புகளை எடுப்பது நிச்சயம் வரவேற்க்க தக்கது தான். ஒரே நோக்கத்திற்காக நாடுகளை கடந்து மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து மக்கள் ஒன்று கூடுவது அறிய வகை நிகழ்வு தான். இதை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சாதித்து காட்டியுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








