போட்றா வெடிய! ராயல் என்ஃபீல்டு ஒரே மாசத்துல இத்தனை வண்டிய வித்துட்டாங்களா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத அளவிற்கு விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏற்றுமதியில் ஒரு செக்மெண்டை தவிர மற்ற அனைத்து செக்மெண்ட்களிலும் வளர்ச்சியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரெட்ரோ கிளாசிக் பைக்கை விற்பனைசெய்து வரும் ஒர நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நீண்ட ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருப்பதை சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் இருப்பதாக உணர்கின்றனர். இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Royal Enfield Sales August 2025

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,14,002 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 73,629 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. தற்போது விற்பனை 40,373 வாகனங்கள் அதிகரித்துள்ளது. இது54.83 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஜூலை மாதம் 88,045 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 29.48 சதவீத வளர்ச்சியாகும்.

350 சிசிக்கும் குறைவான செக்மெண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 98,631 வானகங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 61,084 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது கூடுதலாக 61,087 வாகனங்கள் விற்பனையாகி 37,544 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 61.46 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த ஜூலை மாதம் 76,047 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 22,584 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 29.70 சதவீத வளர்ச்சியாகும்.

Royal Enfield Sales August 2025

350 சிசிக்கு அதிகமான செக்மெண்டில் இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15,371 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 12,542 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்பேஆது 2829 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி 22.56 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதம் 11,998 வாகனங்கள் தான் விற்பனையாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 3373 வாகனங்கள் கூடுதலாக விற்பையாகியுள்ளது. இது 28.11 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

இதில் உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் 1,02,876 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 65,623 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 37,253 வாகனங்கள் அதிகம் ஆகும். இந்த செகமெண்டில் 56.77 சதவீத விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இதுவே கடந்த ஜூலை மாதம் 76,254 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 26,622 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இது 34.91 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

Royal Enfield Sales August 2025

ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் 11,126 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 8,006 வாகனங்களை மட்டும் தான் ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது 3120 வாகனங்கள் கூடுதலாக ஏற்றுமதியாகியுள்ளது. இது38.97 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். இதுவே கட்நத ஜூலை மாதம் 11,791 வானகங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. இதை ஒப்பிடும் போது 665 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதியாகி இந்த ஒரு செக்மெண்டில் மட்டும் 5.64 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கான மவுசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இது அதன் விற்பனை மூலம் நமக்கு தெளிவாக தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. மேலும் தீபாவளிக்கு பிறகு 350 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட வாகனங்களுக்கு ஜிஎஸ்டிவரி அதிகமாகும் என பேசப்படுவதால் தீபவாளிக்கு முன் இந்த செக்மெண்டில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2025, 9:10 [IST]
English summary
Royal enfield sales august 2025 highest ever 54 83 yoy growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X