30 நாளில் 90 ஆயிரம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க! இதுல என்ன இருக்குது?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் ஒரே மாதத்தில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இப்படியா இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது எவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது மக்கள் அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்நிறுவனத்தின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிறுவனம் சிறப்பான விற்பனையை பெற்று கடந்த மே மாதம் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது.

Royal Enfield Sales May 2025

இந்நிலையில் கடந்த மே மாதம் மொத்தம் 89429 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது 26 சதவீதம் அளவிற்கு விற்பனை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 71,010 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இது உள்ளூர் விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டும் சேர்த்து கணக்கிடப்படுகிறது.

கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 13,609 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதியும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 7479 வாகனங்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 75,820 பைக்குள் விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையில் 19 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

Royal Enfield Sales May 2025

இந்த நிதியாண்டில் முதல் 2 மாதங்கள் சேர்த்து மொத்தமாக 24166 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே கால கட்டத்தில் 14,311 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே உள்ளூர் விற்பனையில் 1,51,822 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில் 1,38,569 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் உள்ளூர் விற்பனை இரண்டும் சேர்த்து 1,75,988 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதே போல கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 1,52,880 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. இந்த நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பெற்றுவருகிறது. இதனால் அந்நிறுவனம் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

Royal Enfield Sales May 2025

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 21வது ஹிமாலயன் ஓடிசி என்ற ரைடிங்கை துவங்கியுள்ளது. 70 ரைடர்கள் இதில் பங்கேற்கின்றனர். இந்தியா இமாலய தொடர் வழியாக இந்த பயணம் செய்கிறது. லடாக், ஸான்ஸ்கர், ஸ்பிட்டி, சேலஞ்சிங்கான உமிங்லா ஆகிய ரூட்களில் இந்த பணம் தொடர்கிறது. இதற்கான முன்பதிவுகள் தற்போது துவங்கியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் இந்த வாகனம் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்காலத்தில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 2, 2025, 21:20 [IST]
English summary
Royal enfield sales may 2025 cross 90000 units
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X