தெருக்கு 4 பேர் இந்த வண்டியை வச்சிருப்பாங்க! 1 லட்சம் வண்டிகளை விற்ற ராயல் என்ஃபீல்டு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் முந்தய ஆண்டு நவம்பர் மாதத்தை விட அதிகமாக விற்பனை பதிவு செய்திருந்தாலும் அக்டோர் மாத விற்பனையை ஒப்பிடும் போது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அதிக அளவிலான வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்க மார்கெட்டில் நல்ல மரியாதை இருக்கிறது. மக்கள் பலர் இந்த தயாரிப்புகளை விரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதம் பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் வெளியிட்டுள்ளது.

Royal Enfield Sales Nov 2025

கடந்த நவம்பர் மாதம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மொத்தம் 1,00,670 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் 90,405 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளது. 10265 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு சிறப்பான வளர்ச்சியாகும். ஒட்டு மொத்த விற்பனையில் 350 சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 90312 வாகனங்களும், 350 சிசிக்கு அதிக இன்ஜின் திறன் கொண்ட வாகனங்கள் 10358 வாகனங்களும் விற்பனையாகியுள்ளது.

இதுவே கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாத விற்பனை விபரங்களை பார்க்கும் போது அப்பொழுது மோத்தமே 82257 வானகங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது அதை விட 18413 வாகனங்கள் அதிகமாக விற்பனவையாகியுள்ளது. அப்பொழுது உள்நாட்டு விற்பனையில் 72236 வாகனங்கள் விற்பவனையாகியிருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக 18169 வாகனங்கள் விற்பனவையாகியுள்ளது. ஏற்றுமதியை பொருத்தவரை 10021 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது 244 வாகனங்கள் கூடுதலாக ஏற்றுமதியாகியுள்ளது.

Royal Enfield Sales Nov 2025

350 சிசிக்கு குறைவாகன செக்மெண்டில் 71261 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 19051 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இதுவே 350 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட இன்ஜினை பொருத்தவரை 10996 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது தற்போது 638 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இந்தஒரு செக்மெண்ட் மட்டும் தான் விற்பனையில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதுவே கடந்த அக்டோபர் மாத விற்பனையை ஒப்படும் போது நம்பர் மாதம் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 1,24.,951 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. ஆனால் நவம்பர் மாதம் 24,281 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி மொத்த விற்பனையில் 19.43 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.

Royal Enfield Sales Nov 2025

இதில் உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை கடந்த அக்டோபரில் 1,16,844 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 26439 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 22.63 சதவீத வீழ்ச்சியாகும். ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த அக்டோபர் மதம் வெறும் 8107 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது அதை விட கூடுதலாக2158 கார்கள் ஏற்றமுதியாக 26.62 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இதுவே 350 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட செக்மெண்டில் 1,10874 வாகனங்கள் கடந்த அக்டோபர் மாதம் விற்பனையாகியிருந்தது தற்போது 20562 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. அதாவது 18.55 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. 350 சிசிக்கு அதிகமான செக்மெண்டில் கடந்த அக்டோபரில் 14,077 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 3719 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 26.42 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போதுநல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால் அக்டோபர் மாத விற்பனையை ஒப்பிடும் போது நவம்பரில் விற்பனை குறைந்துள்ளது. இதற்கு முக்கியமா காரணம் பண்டிகை மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான். இதனால் அக்டோபர் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றதால் இந்நிறுவனம் நவம்பரில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வருடாந்திர விற்பனையை பார்க்கும் போது நல்ல வளர்ச்சியை தான் பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 2, 2025, 12:20 [IST]
English summary
Royal enfield sales nov 2025 surpass 1 lakh yoy growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X