விலை குறைவான பைக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த ராயல் என்பீல்டு! அதுக்குனு இவ்ளோ கம்மியா! நம்பவே முடியல!

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்து வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள அசத்தியிருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது நமக்கு தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 86,559 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 82,043 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த விற்பனையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 6 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2025 Royal Enfield Hunter 350

உள்நாட்டு விற்பனையை மட்டும் தனியாக பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 76,002 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு விற்பனையில் ராயல் என்பீல்டு நிறுவனம் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் கிட்டத்தட்ட இதே அளவிலான பைக்குகளைதான் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. சரியாக சொல்வதென்றால், 75,211 பைக்குகள். அப்படியானால் ஒட்டுமொத்த விற்பனை எப்படி 6 சதவீதம் உயர்ந்தது? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்த வளர்ச்சிக்கு காரணம் ஏற்றுமதி ஆகும்.

2025 Royal Enfield Hunter 350 Side Design

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் இருந்து 10,557 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,832 ஆக மட்டுமே இருந்தது. இது 55 சதவீத வளர்ச்சி ஆகும். ஏற்றுமதியில் கண்டுள்ள இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த விற்பனையிலும் சிறப்பான வளர்ச்சியை ராயல் என்பீல்டு பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தைகளில் தொடர்ச்சியாக புத்தம் புதிய பைக்குகள் மற்றும் ஏற்கனவே விற்பனையில் உள்ள பைக்குகளின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (2025 Royal Enfield Hunter 350) பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக் நேபாளத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2025 ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.50 லட்ச ரூபாயாக மட்டுமே! இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தை சிறப்பான வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் புத்தம் புதிய 450 சிசி மற்றும் 650 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் 750 சிசி கஃபே ரேஸர் பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, May 2, 2025, 23:52 [IST]
English summary
Royal enfield sales report april 2025 upcoming 450 650 cc bikes 750 cc cafe racer
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+