ராயல் என்பீல்ட அடிக்கலாம் ஒருத்தன் புதுசா பொறந்துதான் வரணும்! இப்பவே இப்படினா இந்த பைக் வந்ததுக்கு அப்புறம்...
இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி, ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புகின்றனர். இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 80,799 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் உள்நாட்டில் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதே சமயம் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து 9,871 பைக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இருந்து ராயல் என்பீல்டு பைக்குகளின் ஏற்றுமதி 23 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 90,670 பைக்குகளை விற்பனை (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 19 சதவீதம் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி மற்றும் ஒட்டுமொத்த விற்பனை என அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதால், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சி வரும் மாதங்களிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைய நிலையில் கிளாசிக் 350, ஹண்டர் 350, மீட்டியோர் 350, புல்லட் 350, கோவன் கிளாசிக் 350, ஹிமாலயன், ஸ்க்ராம் 440, குரில்லா 450, பியர் 650, ஷூட்கன் 650, சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 உள்ளிட்ட பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.
வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புத்தம் புதிய பைக்குகளை எல்லாம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை அறிமுகம் செய்யவுள்ளது. எனவே வரும் காலங்களிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி தொடரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்காலத்தில் நிறைய பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்றாலும் கூட, கூடிய விரைவில் விற்பனைக்கு வரவிருப்பது ராயல் என்பீல்டு கிளாசிக் 650 (Royal Enfield Classic 650) ஆகும். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த பைக் களமிறக்கப்படவுள்ளது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளதால், கிளாசிக் 650 பைக்கின் வருகை, ராயல் என்பீல்டிற்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








