வரலாற்றில் முதல் முறையா இப்படி நடந்திருக்கு... ராயல் என்பீல்டை இனி கையிலயே பிடிக்க முடியாது போங்க...

2024-25ம் நிதியாண்டு (Financial Year), கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு வாகன நிறுவனங்களின் கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட்களும் (Sales Reports) தற்போது வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 10,09,900 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதில், மிக முக்கியமான சாதனை ஒன்று அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு நிதியாண்டில் முதல் முறையாக 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதற்கு முன்பாக வேறு எந்தவொரு நிதியாண்டிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் 10 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகளை விற்பனை செய்தது கிடையாது.

Royal Enfield Guerrilla 450

இந்த சாதனை மூலம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதாவது இதற்கு முந்தைய நிதியாண்டான 2023-24ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீத வளர்ச்சி ஆகும். நிதியாண்டு வகையில் மட்டுமல்லாது, மார்ச் மாத அளவிலும் ராயல் என்பீல்டு விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

அதாவது நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 1,01,021 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 34 சதவீத வளர்ச்சி ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Royal Enfield Guerrilla 450 Front View

இதன் காரணமாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் இப்படிப்பட்ட சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 14 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இதில், கிளாசிக் 350, கோவன் கிளாசிக் 350 போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை தவிர, புல்லட் 350, ஹண்டர் 350, மீட்டியோர் 350, ஹிமாலயன், ஸ்க்ராம் 440, குரில்லா 450, கிளாசிக் 650, பியர் 650, ஷூட்கன் 650, சூப்பர் மீட்டியோர் 650, இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் பல்வேறு விலைகளில் பல்வேறு புத்தம் புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. எனவே வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப எலெக்ட்ரிக் பைக்குகளையும் (Electric Bikes) விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். உலகம் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த முடிவு மிகவும் அவசியமான ஒன்று.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 23:21 [IST]
English summary
Royal enfield sales report financial year 2024 25 check all details here
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+