வெறும் 1 லட்ச ரூபா ரேஞ்சுல 50 கிமீ மைலேஜ் தரும் ராயல் என்பீல்டு பைக்கா! மார்க்கெட்ட தலகீழா திருப்பி போட போகுது
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 88,045 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 31 சதவீத வளர்ச்சி ஆகும். இதில், ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்த பைக்குகளின் எண்ணிக்கை 76,254 ஆகும். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
எஞ்சிய 11,791 பைக்குகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் இருந்து வெறும் 6,057 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. அதாவது ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.

நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம் மட்டுமல்லாது, நடப்பு 2025-26ம் நிதியாண்டும், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தற்போது வரை சிறப்பாகவே அமைந்துள்ளது. நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் (ஏப்ரல்-ஜூலை) ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 3,53,573 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்கள் உடன் ஒப்பிடும்போது இது 20 சதவீத வளர்ச்சி ஆகும். இதில், 3,05,033 பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்கள் உடன் ஒப்பிடும்போது இது 15 சதவீத வளர்ச்சி ஆகும். அப்போது 2,65,894 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
எஞ்சிய 48,540 பைக்குகள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 4 மாதங்கள் உடன் ஒப்பிடும்போது இது 72 சதவீத வளர்ச்சி ஆகும். ஏனெனில் அப்போது வெறும் 28,278 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை தற்போதே மிகவும் சிறப்பாகதான் உள்ளது. ஆனால் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் ஏராளமான புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் 250 சிசி ஹைப்ரிட் பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்கலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) வெறும் 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மைலேஜ் மற்றும் குறைவான விலை ஆகிய காரணங்களால், இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








