கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக்! 50 கிமீ-க்கு மேல மைலேஜை வாரி வழங்கும்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் உள்நாட்டில், 76,957 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவில் இருந்து சர்வதேச சந்தைகளுக்கு, 12,583 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்றுமதி செய்து அசத்தியுள்ளது.

Royal Enfield Classic 350

கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 79 சதவீத வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 89,540 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது 22 சதவீத வளர்ச்சி ஆகும்.

நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டுமல்லாது, நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டிலும் (ஏப்ரல்-ஜூன்), ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. அதாவது நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 2,65,528 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

Royal Enfield Bullet 350

இது கடந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 17 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த 2,65,528 பைக்குகளில், 2,28,779 பைக்குகள் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதே சமயம் 36,749 பைக்குகள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

ஆக மொத்தம், நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும், ராயல் என்பீல்டு நிறுவனம் 2,65,528 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

ஏனெனில், ராயல் என்பீல்டு நிறுவனம், ஏராளமான புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதில், 750 சிசி மற்றும் 650 சிசி இன்ஜின் திறன் கொண்ட புதிய பைக்குகளின் வருகை மிகவும் முக்கியமானது ஆகும். அத்துடன் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

ஃப்ளையிங் ஃப்ளா சி6 (Flying Flea C6) என்ற அந்த எலெக்ட்ரிக் பைக்கின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. அனேகமாக வரும் 2026ம் ஆண்டில், இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மிகவும் விலை குறைவான புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது 250 சிசி இன்ஜின் திறன் கொண்ட ஹைப்ரிட் பைக் ஆகும். ஹைப்ரிட் பைக் என்பதால், ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த பைக்கின் ஆரம்ப விலை வெறும் 1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.

இது நடக்கும்பட்சத்தில், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும். எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய பைக் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக 2026ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் வழங்க கூடிய 250 சிசி ஹைப்ரிட் பைக் வந்தால், அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் கருதுகிறோம். இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை பிரம்மாண்டமான ஒன்றாக மாற்ற உதவி செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2025, 23:03 [IST]
English summary
Royal enfield sales report june 2025 22 per cent growth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+