வெறும் 1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்கா! லிட்டருக்கு 50 கிமீ மைலேஜை வேற குடுக்குமாம்!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,24,951 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
இதில், 1,16,844 பைக்குகள் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். எஞ்சிய 8,107 பைக்குகள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். ஒட்டுமொத்தமாக நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1,24,951 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 13 சதவீத வளர்ச்சி ஆகும். அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு பண்டிகை காலத்தையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் பண்டிகை காலமாக இருந்தது.
இந்த 2 மாதங்களிலும் ஒருங்கிணைந்து, 2,49,279 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 26 சதவீத வளர்ச்சி ஆகும். அத்துடன் நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களிலும் (ஏப்ரல்-அக்டோபர்), ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

அதாவது நடப்பு 2025-26ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் ஒட்டுமொத்தமாக 7,16,854 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இது 27 சதவீத வளர்ச்சி ஆகும். அனைத்து வகைகளிலும் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்திருப்பது, ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும்.
ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில், 350 சிசியில் இருந்து 750 சிசி வரை, ஏராளமான பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அத்துடன் எலெக்ட்ரிக் பைக்குகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே வரும் காலங்களில், ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.
இதுதவிர 250 சிசி செக்மெண்ட்டில் அதிக மைலேஜ் வழங்கும் ஹைப்ரிட் பைக் ஒன்றையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஹைப்ரிட் பைக் என்பதால், ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் வரையிலான மைலேஜை எதிர்பார்க்கலாம். அத்துடன் இது 250 சிசி செக்மெண்ட்டை சேர்ந்தது என்பதால், விலையும் குறைவாக இருக்கும்.
அனேகமாக இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1-1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும். ஆனால் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதைதான் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் எடுத்துக்காட்டுகிறது. புதிய பைக்குகள் வரவுள்ளதால், இனி வரும் காலங்களில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








