50 கிமீ மைலேஜ்! வெறும் 1 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்! போட்டியாளர்களுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்
சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு (Bikes), இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு பதிவு செய்து கொண்டுள்ளது.
இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், வரலாறு காணாத வகையில், மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது. காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), 1,24,328 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வரலாற்றிலேயே, ஒரு மாதத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை இதுதான். இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்தது கிடையாது. இதற்கு 2 காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் ஜிஎஸ்டி (GST) வரி குறைக்கப்பட்டிருப்பது முதல் காரணம் ஆகும். 2வது காரணம், பண்டிகை காலம். பொதுவாக பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களின் விற்பனை உயரும். அந்த வகையில் தற்போதும் புதிய வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. ஆனால் இம்முறை ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்துள்ளதால், ராயல் என்பீல்டு நிறுவனம் பைக் விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 86,978 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,24,328 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 37,350 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் 42.94 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 (Hunter 350), புல்லட் 350 (Bullet 350), கிளாசிக் 350 (Classic 350), மீட்டியோர் 350 (Meteor 350) மற்றும் கோவன் கிளாசிக் 350 (Goan Classic 350) போன்ற பைக்குகளின் விலை (Price) வெகுவாக குறைந்துள்ளது. எனவே இது ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க சரியான நேரம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் எதிர்காலத்தில் 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி செக்மெண்ட்களில் ஏராளமான புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக 250 சிசி செக்மெண்ட்டில் புதிய பைக் ஒன்றையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 1-1.20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 50 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற பல்வேறு புதிய பைக்குகளின் வருகை காரணமாக, எதிர்காலத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








