ஒரு மில்லியனை கடந்த விற்பனை.. ராயல் என்பீல்டுக்கு எல்லாரும் வாழ்த்துக்கள் சொல்லுங்கப்பா..
இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு விற்பனையில் மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு மில்லியன் விற்பனை எனும் சாதனையையே அது படைத்திருக்கின்றது. ஸ்கூட்டர் அல்லாத மோட்டார் சைக்கிள் வகை டூ-வீலர்களை மட்டுமே தயாரித்து வரும் நிறுவனமாக ராயல் என்பீல்டு இருக்கின்றது. அதுவும், நிறுவனம் தயாரிக்கும் அனைத்தும் ரெட்ரோ லுக் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். இவையே சென்ற 2024-2025 நிதியாண்டில் 1,009,900 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன.
இதன் வாயிலாக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியர்களின் ஃபேவரிட் பிராண்டு என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது. இதுமட்டுமல்ல, ரெட்ரோ லுக் கொண்ட வாகனங்களுக்கு இந்தியாவில் இப்போதும் சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பதும் தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளுக்கே இந்தியர்கள் மத்தியில் சென்ற நிதியாண்டில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 86 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனையை 350 சிசி பைக்குகளே பெற்றிருக்கின்றன. அதாவது, 87 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் அதிகமாக ராயல் என்பீல்டு 350 சிசி பைக்குகளே விற்பனையாகி இருக்கின்றன. இந்த 350 சிசி-இன் கீழ் ராயல் என்பீல்டு நிறுவனம் ஐந்து பைக் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
கிளாசிக் 350 (Classic 350), கோன் கிளாசிக் 350 (Goan Classic 350), புல்லட் 350 (Bullet 350), ஹண்டர் 350 (Hunter 350), மீட்டியோர் 350 (Meteor 350) ஆகிய பைக் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 650 சிசி பிரிவிலேயே அதிக மோட்டார்சைக்கிள்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650), இன்டர்செப்டார் 650 (Interceptor 650), சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650), ஷாட்கன் 650 (Shotgun 650), பியர் 650 (Bear 650) மற்றும் புதிய வரவான கிளாசிக் 650 (Classic 650) ஆகியவற்றையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதைத் தொடர்ந்து, 450 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் குவரில்லா 450 (Guerilla 450) மற்றும் ஹிமாலயன் (Himalayan) ஆகிய பைக் மாடல்களுக்கும் இந்தியர்கள் தங்களின் நல் ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த பைக்குகளை மட்டுமல்ல ராயல் என்பீல்டு 440 சிசி பைக் பிரிவில் ஸ்கிராம் 440 (Scram 440) மாடலையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையை தாயமாகக் கொண்டு இயங்கும் இந்த பிராண்டு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் அதன் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரே ஆண்டில் 1 மில்லியன் விற்பனை எனும் மாபெரும் சாதனையைப் படைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








