உலகையே ஸ்தம்பிக்க வைத்த சீனா! வாலை ஒட்ட நறுக்கிய தமிழ்நாடு! இனி இருக்கற இடமே தெரிய கூடாது!

உலகின் பல்வேறு நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் சமீபத்தில் உலகின் எலெக்ட்ரிக் வாகன சந்தையையே சீனா (China) ஸ்தம்பிக்க வைத்து விட்டது. அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் (Rare Earth Minerals And Magnets) ஏற்றுமதிக்கு சீனா விதித்த தடைதான் இதற்கு காரணம்.

உலகில் 90 சதவீத அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் அவற்றின் ஏற்றுமதிக்கு சீனா திடீரென தடை விதித்தது. இதனால் இந்தியா (India) உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

2025 Simple One Front View

ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இந்தியாவை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாத எலெக்ட்ரிக் மோட்டார்களை (Electric Motors) உற்பத்தி செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாத எலெக்ட்ரிக் மோட்டார்களை உருவாக்கும் முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்னும் சோதனை அளவிலேயே உள்ளன.

2025 Simple One

ஆனால் சிம்பிள் எனர்ஜி நிறுவனமோ, அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாத எலெக்ட்ரிக் மோட்டார்களை, உற்பத்தி செய்யவே தொடங்கி விட்டது. அத்துடன் அந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள், சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டு, அவற்றின் விற்பனையும் கூட தொடங்கி விட்டது.

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்கள், வழக்கமான எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு நிகரான செயல்திறன் மிக்கவை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. தமிழ்நாட்டின் (Tamil Nadu) ஓசூர் (Hosur) பகுதியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அங்குதான் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு நிறுவனங்களும் இன்னமும் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் இல்லாத எலெக்ட்ரிக் மோட்டார்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அதை சாதித்து காட்டி விட்டது. எனவே இந்த துறையில் வரும் காலங்களில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, நமக்கு நிறைய நன்மைகளை வழங்கும். எதிர்காலத்தில் சீனா அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தாலும் கூட, எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி பாதிக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும். அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கும் கூட இது உதவி செய்யும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 16, 2025, 23:56 [IST]
English summary
Simple energys rare earth free electric motors production begins in india check all details here
மேலும்... #simple energy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+