எழுதி வெச்சிக்கோங்க... இந்த பைக்கின் விலை பெருசா குறைய போகுது! ஜாவா கம்பெனியின் மாஸ்டர் பிளான்
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 42 எஃப்.ஜே (42 FJ) என்கிற புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2024 செப்டம்பர் மாதத்தில் 'ஜாவா 42' பைக்கின் அடுத்த புதிய வெர்சனாக '42 எஃப்ஜே' கொண்டுவரப்பட்டது.
இது, வழக்கமான சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் (Single-cylinder Engine)-ஐ கொண்ட பைக் ஆகும். ஆனால், இரு பக்கங்களிலும் டபுள் எக்ஸாஸ்ட் குழாய்கள் உடன் புதிய 42 எஃப்ஜே பைக் அறிமுகம் செய்யப்பட்டது மார்க்கெட்டில் கவனத்தை ஈர்த்தது. ஆனால், டபுள் எக்ஸாஸ்ட் (Twin Exhaust) குழாய்கள் உடன் இன்னும் சில காலத்திற்கு மட்டுமே ஜாவா 42 எஃப்ஜே பைக் விற்பனையில் இருக்கும் போல் தெரிகிறது.

ஏனெனில் தற்போது வெளியாகியுள்ள சில படங்களில், ஒரு பக்கத்தில் மட்டுமே எக்ஸாஸ்ட் குழாயை கொண்ட ஜாவா 42 எஃப்ஜே பைக் காட்சியளிக்கிறது. சிவப்பு நிற நம்பர் பிளேட் (Number Plate) உடன் இந்த படங்களில் காட்சியளிக்கும் 42 எஃப்ஜே பைக் ஆனது எவரொருவருக்கும் சொந்தமானது கிடையாது.
பொதுவாக, தற்காலிகமான சிவப்பு நிற நம்பர் பிளேட் ஆனது வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பயன்பாட்டிற்காகவும், ஷோரூம் பயன்பாட்டிற்காகவும் சாலைக்கு வாகனம் கொண்டுவரும்போது பொருத்தப்படுவது ஆகும். வாகனத்தை சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்வதற்காக சிவப்பு நிற நம்பர் பிளேட் பொருத்தப்படுவது உண்டு. இதில் இருந்து சிங்கிள்-எக்ஸாஸ்ட் குழாய் உடன் 42 எஃப்ஜே பைக்கை அறிமுகம் செய்ய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாராகி வருவதை அறிய முடிகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக சிங்கிள்-எக்ஸாஸ்ட் குழாயை கொண்ட புதிய ஜாவா 42 எஃப்ஜே பைக் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. எக்ஸாஸ்ட் குழாயின் எண்ணிகை 2இல் இருந்து ஒன்றாக குறைவதால் அதற்கேற்ப பைக்கின் எடையும் நிச்சயம் குறைந்திருக்கும். இதன் மூலமாக, ஜாவா 42 எஃப்ஜே பைக்கை ஹேண்டில் செய்வதும் முன்பை விட எளியதாக இருக்கும்.
மேலும், என்ஜினின் செயல்பாடுகள் நேரடியாக எக்ஸாஸ்ட் குழாய்களை சார்ந்து உள்ளதால், புதிய 42 எஃப்ஜே பைக்கில் மைலேஜ் அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. எக்ஸாஸ்ட் குழாய்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருப்பதை தவிர்த்து, பைக்கின் என்ஜின் & கியர்பாக்ஸ் செட்-அப்பில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. இதனால், ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் தற்போது பொருத்தப்படும் அதே என்ஜின் தான் புதிய மாடலிலும் பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் தற்சமயம் 334சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 28.7 பிஎச்பி மற்றும் 29.62 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த ஜாவா பைக்கில் முன் சக்கரம் 18-இன்ச்சிலும், பின் சக்கரம் சற்று சிறியதாக 17-இன்ச்சிலும் வழங்கப்படுகிறது.
சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கையும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களையும் பெறுகின்ற ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் பிரேக் பணியை கவனித்துக் கொள்ள இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன. அத்துடன், பயணிகளின் கூடுதல் பாதுகாப்புக்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாவா 42 எஃப்ஜே பைக்கில் டபுள் எக்ஸாஸ்ட் குழாய்களுக்கு பதிலாக சிங்கிள் எக்ஸாஸ்ட் குழாய் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில், டபுள் எக்ஸாஸ்ட் குழாய்கள் உடனும் இந்த ஜாவா பைக் தொடர்ந்து விற்பனை செய்யப்படலாம். எக்ஸாஸ்ட் குழாய்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால், அதற்கேற்ப 42 எஃப்ஜே பைக்கின் விலைகளும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








