இவி ஸ்கூட்டர்களுக்கு ரூ20,000-ரூ30,000 தள்ளுபடி! ஆனா இதுல ஒரு விஷயம் கவனம்!

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எந்த விதமான ஜிஎஸ்டி குறைப்பும் இல்லாத நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசே தள்ளுபடியை வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மவுசு அதிகமாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதற்கு முக்கிமான காரணம் பெட்ரோல் செலவை குறைப்பது தான். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆகும் செலவு பெட்ரோல் செலவை ஒப்பிடும் போது மிகவும் குறைவாக இருக்கிறது.

subsidy for electric scooter

இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி வரி குறைப்பால் டீசல், பெட்ரோல் வாகனங்களின் விலை குறைந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையவில்லை. இந்நிலையில் ஓடிசா மாநில அரசு தற்போது ரூ20,000 - ரூ30,000 வரை மானியங்கள் வழங்க முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது புதிய எலெக்ட்ரிக் வாகன பாலிசி 2025-ன் கீழ் இந்த தள்ளுபடியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இந்த மானியம் என்பது ஒரு கிலோ வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்ட வாகனத்திற்கு ரூ5000 மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ30,000 வரை தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இது புதிய மானியம் கிடையாது,.இந்த மாநிலத்தில் ரூ20,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது ரூ30,000 வரை வழங்கப்படுகிறது. புதிய ஸ்கூட்டர் பைக் அதிக பேட்டரி திறன் உடன் வந்தால் அதிகபட்ச மானியத்தை பெற முடியும்.

subsidy for electric scooter

இது எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு மட்டுமல்ல எலெக்ட்ரிக் 3 வீலர், எலெக்ட்ரிக் 4 வீலர்கள், டாக்ஸிகள், மற்றும் பஸ்களுக்கு அடங்கும். 4 வீலர்களுக்கான மானியம் ரூ1.50 லட்சம் முதல் ரூ2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பஸ்களுக்கு ரூ20 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இந்த மானியத்தை பெற ஓடிசா குடிமகனாக இருக்க வேண்டும். ஒரு நபர் அதிகபட்சம் ஒரு வாகனத்திற்கு மட்டுமே இந்த தள்ளுபடியை பெற முடியும். இந்த திட்டம் ஆரம்பிக்கும்போது 2025ம் ஆண்டில் பதிவுசெய்யப்படும் வாகனங்களில் 20 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்க வேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது உள்ள டிரெண்ட் வெறும் 9 சதவீதமாக மட்டுமே இது உள்ளது. இது 2030ம் ஆண்டு இது 50 சதவீதமாக உயரப்போகிறது. இதன் காரணமாக மானியத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை பயன்படுத்தி மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம ்வாங்க துவங்குவார்கள். விரைவில் அம்மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான இவி வாகனங்கள் விற்பனையானால் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஓன்றும் இல்லை.

subsidy for electric scooter

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் நிலையில் தற்போது மாநில அரசுகள் இதற்கு மானியங்களை வழங்குவது இவி வாகன விற்பனையை அதிகரிக்கும். இது ஓடிசாவில் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம ்தமிழகத்திலும் வழங்கப்பட்டால் விற்பனை நிச்சயம் அதிக எண்ணிக்கையிலான இவி வாகனங்கள் தமிழ்நாட்டில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த வாகனங்கள் விற்பனையை அதிகரிக்க மாநில அரசுகளின் உதவி நிச்சயம் தேவை

More from DriveSpark

Article Published On: Sunday, September 14, 2025, 20:10 [IST]
English summary
Subsidy for electric scooter in odisha increased to rs 30000
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X