65 கிமீ மைலேஜை வாரி வழங்கும் ஸ்கூட்டர் விலை இவ்ளோதானா! ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடருக்கு எமன்!
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் சுலபமாக ஓட்ட முடியும் என்பது போன்ற காரணங்களால், ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பலரும் ஸ்கூட்டர்களை விரும்புவதற்கு மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால், வீட்டில் உள்ள பெண்களாலும் எளிமையாக இயக்க முடியும் என்பதுதான்.
இந்திய சந்தையை பொறுத்தவரையில், ஏராளமான ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் இதில் ஒரு சில ஸ்கூட்டர்கள் மட்டும்தான் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கின்றன. அப்படி ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக சுஸுகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125) திகழ்கிறது.

நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதமும் கூட, சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையின் மூலமாக, வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பைக்தேக்கோ தளம் வெளியிட்டுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், 68,172 சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அதற்கு முந்தைய ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 51,555 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் மாதாந்திர ரீதியிலான விற்பனை ஒப்பீட்டில், சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், 32.23 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இருப்பினும் வருடாந்திர ரீதியிலான விற்பனை ஒப்பீட்டில், சுஸுகி ஆக்ஸஸ் 125 சற்றே சறுக்கியுள்ளது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம், 71,247 சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதம், 68,172 ஆக சரிவடைந்துள்ளது. இது 4.31 சதவீத வீழ்ச்சி ஆகும். இருப்பினும் இது சிறிய அளவிலான வீழ்ச்சி மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
செயல்திறனை பொறுத்தவரையில், சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில், 124 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 45 கிலோ மீட்டர்கள் முதல் 65 கிலோ மீட்டர்கள் வரை மைலேஜ் (Mileage) வழங்குவதாக, அதன் உரிமையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், கலர் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், க்ரோம் பூசப்பட்ட சைடு வியூ மிரர்கள், முன் பகுதியில் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ள வசதியாக யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், முன் பகுதியில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஸன், சௌகரியமான பயணத்தை உறுதி செய்யும் நீளமான இருக்கை போன்றவை எல்லாம் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 24.4 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட், ஷாப்பிங் பைகள், பர்ஸ் மற்றும் ஷூக்கள் போன்றவற்றை எல்லாம் வைத்து கொள்ள முடியும். அத்துடன் முன் பகுதியில் வாட்டர் பாட்டில் போன்றவற்றை எல்லாம் வைத்து கொள்ள ஏதுவாக 2 பாக்கெட்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 88,537 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டின் விலை 1,06,133 ரூபாயாக உள்ளது. இவை சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பாக சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை குறிப்பிடலாம். ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் 125 (TVS Jupiter 125) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக சுஸுகி ஆக்ஸஸ் 125 திகழ்கிறது.
கூடிய விரைவில் சுஸுகி நிறுவனம் இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அனேகமாக வரும் செப்டம்பர் மாதம் சுஸுகி இ ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








