இவ்ளோ கம்மியான விலையில் 125 சிசி ஸ்கூட்டரா! ஹோண்டா ஆக்டிவாவிற்கு டஃப் குடுக்கும் சுஸுகி!

இந்திய சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு தயாரிப்பு ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா ஆக்டிவா பதிவு செய்து வருகிறது.

அதேபோல் ஹோண்டா ஆக்டிவாவிற்கு போட்டியாக, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மற்றொரு ஸ்கூட்டர் சுஸுகி ஆக்ஸஸ் 125 (Suzuki Access 125). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.

Suzuki Access 125

இதன்படி பார்த்தால், சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், 51,555 ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 52,192 ஆக இருந்தது. இது 1.22 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இருப்பினும் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters June 2025), சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், 3வது இடத்தை பிடித்துள்ளது. சிறிய அளவிலான சரிவுதான் என்பதால், சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர், கூடிய விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS Jupiter

சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில், 124 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஸ்ஓஹெச்சி 2 வால்வு இன்ஜின் (Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 6500 ஆர்பிஎம்மில் 6.2 kW பவரையும், 5000 ஆர்பிஎம்மில் 10.2 Nm டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில், 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் (Fuel Tank Capacity) வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 88,036 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1,06,133 ரூபாயாக இருக்கிறது. இவை சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுவதால்தான், சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதல் இடத்தில் உள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) 2வது இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தில் சுஸுகி ஆக்ஸஸ் இருக்கிறது.

இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் ஆகியவற்றுக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக சுஸுகி ஆக்ஸஸ் 125 திகழ்கிறது. இதில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனையில் 21.47 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் வீழ்ச்சி சதவீதம் 1.22 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் 49.76 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் 125 வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 98,991 ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 1,02,962 ரூபாயாக உள்ளது. இவை ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 28, 2025, 11:55 [IST]
English summary
Suzuki access 125 sales report june 2025 1 22 per cent down
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+