90 கிமீ மைலேஜ்! ஹோண்டா, டிவிஎஸ் கதையை முடிக்க வரும் புதிய ஸ்கூட்டர்! அந்த நிறுவனத்தோட தயாரிப்பா இது!

இந்தியாவில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய சிஎன்ஜி ஸ்கூட்டர்களை (CNG Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், பல்வேறு நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், இந்தியாவை சேர்ந்த டிவிஎஸ் (TVS) நிறுவனம் முன்னணியில் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர், கிட்டத்தட்ட விற்பனைக்கு தயாராகி விட்டது.

அது டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி (TVS Jupiter 125 CNG) ஆகும். உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி விற்பனைக்கு வரவுள்ளது. அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் மத்தியில், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suzuki Access 125

இந்த சூழலில், டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டருக்கு போட்டியாக, சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி (Suzuki Access CNG) ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் தற்போது ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 (Japan Mobility Show 2025) வாகன திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில், சுஸூகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனை காட்சிக்கு வைத்துள்ளது. இதன் காரணமாகவே சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. டீம் பிஹெச்பி தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பார்த்தால், சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரில், 6 லிட்டர் சிஎன்ஜி டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

TVS Jupiter 125 CNG Side Design

ஆனால் டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு வெறும் 1.4 லிட்டர் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரில், சிஎன்ஜி டேங்க் இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக இருக்கைக்கு அடியில் உங்களால் பொருட்களை எல்லாம் வைத்து கொள்ள முடியாது.

இருப்பினும் வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது, மைலேஜ் அதிகமாக இருக்கும் என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம் ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டர் ஒரு கிலோவிற்கு 84 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதே அளவிற்கான மைலேஜை, சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரிலும் எதிர்பார்க்கலாம்.

ஆனால் சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரின் மைலேஜ் எவ்வளவு? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரானது, டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரை போலவே, சிஎன்ஜி மூலமாக மட்டுமல்லாது, பெட்ரோல் மூலமாகவும் இயங்கும்.

இதற்காக சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரில், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. எனவே சிஎன்ஜி பங்க்குகள் பற்றிய கவலை இல்லாமல், ஸ்கூட்டரை இயக்க முடியும். டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கூட, 2 லிட்டர்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸூகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், அது டிவிஎஸ் ஜூபிடர் 125 சிஎன்ஜி ஸ்கூட்டருக்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால் ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரை சுஸூகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை அறிமுகம் செய்வதாக இருந்தாலும் கூட, அதற்கு இன்னும் ஒரு சில வருடங்கள் ஆகலாம் என நாங்கள் கருதுகிறோம். முன்னதாக சுஸூகி நிறுவனம் ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களிலோ அல்லது இன்னும் ஒரு சில மாதங்களிலோ, சுஸூகி ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்து விடும்.

முன்னதாக சுஸூகி ஆக்ஸஸ் பெட்ரோல் ஸ்கூட்டர் இந்தியாவில் தற்போதே விற்பனையில் இருந்து வருகிறது. இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். இந்த சூழலில், அதன் சிஎன்ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டால், பெட்ரோல், எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி என 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் என்ற பெருமைய சுஸூகி ஆக்ஸஸ் பெறும். இது அதன் நேரடி போட்டி மாடலான ஹோண்டா ஆக்டிவாவிற்கும் (Honda Activa) நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2025, 12:10 [IST]
English summary
Suzuki access cng scooter unveiled at japan mobility show 2025 tvs jupiter 125 cng rival
மேலும்... #suzuki motorcycle #new launches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+