ஜப்பான்காரன் கொலவெறில இருக்கான்! உலகையே மிரள விட போகும் ஸ்கூட்டர் இந்தியாவுக்கு வருதா! ஆக்டிவா கதை முடிஞ்சுது!
இந்திய சந்தையில், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய 2 ஸ்கூட்டர்களும், மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 ஸ்கூட்டர்களுக்கும், ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதமும் விதிவிலக்கு அல்ல. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின், சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம், 67,477 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 54,118 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 13,359 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் விற்பனையில் 24.68 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters November 2025), சுஸுகி ஆக்ஸஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது.

சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில், 124 சிசி எஸ்ஓஹெச்சி 2 வால்வு 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கலர் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட், முன் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்பட ஏராளமான வசதிகள் (Features), சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 81,489 ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட 97,681 ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை சுஸுகி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில், இந்திய சந்தையில், ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை, விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. சுஸுகி இ-ஆக்ஸஸ் (Suzuki e-Access) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு வரவுள்ளது. சுஸுகி இ-ஆக்ஸஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.
இதுதவிர ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷனையும், சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 (Japan Mobility Show 2025) வாகன திருவிழாவில், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாகவே சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகின் முதல் சிஎன்ஜி ஸ்கூட்டர் (World's First CNG Scooter) என்ற பெருமையுடன், டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி (TVS Jupiter CNG), கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதே அளவிலான மைலேஜதான், சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டரும் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் வெர்ஷன் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன் ஆகியவற்றின் வருகைக்கு பின்னர், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வரும் காலங்களில், ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடருக்கு நெருக்கடி ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








