களத்தில் ஜப்பான் இன்ஜினியர்கள்! 90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை களமிறக்கும் சுஸுகி! நடுக்கத்தில் ஹோண்டா ஆக்டிவா
இந்திய சந்தையில், வாடிக்கையாளர்கள் மத்தியில், மிக நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access). இந்த ஸ்கூட்டரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 70,327 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 74,813 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 4,486 சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் விற்பனையில் 6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் பட்டியலில் (Top 10 Scooters October 2025), சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டருக்கு 3வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. ஆனால் வரும் காலங்களில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதுதான் இதற்கு காரணம். ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025 (Japan Mobility Show 2025) வாகன திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் சிஎன்ஜி வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதன் மைலேஜ் (Mileage) அனேகமாக ஒரு கிலோவிற்கு சுமார் 90 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகில் அதிக மைலேஜ் வழங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்று என்ற பெருமையை சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் சுஸுகி ஆக்ஸஸ் சிஎன்ஜி ஸ்கூட்டர், இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி (TVS Jupiter CNG) ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் மத்தியில் டிவிஎஸ் ஜூபிடர் சிஎன்ஜி ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிஎன்ஜி வெர்ஷனின் வருகைக்கு பின்னர், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இது டிவிஎஸ் ஜூபிடர் மட்டுமல்லாது, ஹோண்டா ஆக்டிவா போன்ற போட்டி நிறுவனங்களுக்கும் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








