பெட்ரோலும் வேணாம், சார்ஜூம் தேவையில்லை! காற்றில் இயங்கும் ஸ்கூட்டர் வரப்போகுது!

சுஸூகி நிறுவனம் தனது பர்க்மேன் ஸ்கூட்டரை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ஸ்கூட்டராக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோல் பயன்படுத்த தேவையில்லை, இவி வாகனம் போல சார்ஜ் போட வேண்டாம். வெறும் ஹைட்ரஜன் வாயு மூலமே ஸ்கூட்டர் இயங்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று மார்கெட்டில் ஏராளமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்துவிட்டன. இது டூவீலர் உலகையே புரட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் சுஸூகி நிறுவனம் வித்தியாசமாக யோசித்து இவி போல இல்லைாமல் ஹைட்ரஜன் பவரில் இயக்கும் ஸ்கூட்டர் ஒன்றை உரவாக்க முடவிவு செய்துள்ளது. இதற்கு அந்நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் பர்க்மேன் ஸ்கூட்டரையே பயன்படுத்த டிவு செய்துள்ளது.

Suzuki Burgman Hydrogen Scooter

இந்த பர்க்மேன் ஸ்கூட்டர் இந்தியாவில் சுஸூகி நிறுவனம் விற்பவனை செய்யும் ஸ்டைலான சிறப்பான ஃபெர்பார்மென்ஸ் மற்றும் சொகு வசதிகள் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். இதில் தான் பெட்ரோல், பேட்டரி எதுவும் இல்லாமல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

சுஸூகி நிறுவனம் சிறப்பான ஃபெர்பார்மென்ஸ் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு இது இரண்டையும் மனதில் வைத்து இந்த தொழிற்நட்பத்தை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துளு்ளது. இது தற்போது உள்ள கம்பஷன் இன்ஜின் போல சத்தம் மற்றும் பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும். ஆனால் மாசு வெறியேறாது.

ஹைட்ரஜன் இன்ஜின் பெட்ரோல் இன்ஜின் போல தான் செயல்படும். ஆனால் பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தும். ஹைட்ரஜன் கம்பஷன் இன்ஜினில் ஏரியும் போது அது காற்றுடன் கலந்து தண்ணீரைதான் உருவாக்கும். தண்ணீர் தான் கழிவாக வெளியேறும் மாறாக கார்பன் கலந்த மாசு வெளியேறாது.

2025 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் இந்நிறுவனம் இதன் கட்டவே மாடலை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. அப்படி என்றால் அடுத்தாண்டு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனத்தை தயாரிக்கும் என எதிர்பார்க்கலாம். சுஸூகி நிறுவனம் மாசுஇல்லாத வாகனங்களை தயாரிப்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது. சமீபத்தில் தான் இ-ஆக்ஸஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கிடையில் ஹைட்ரஜன் ஸ்கூட்டர் தொழிற்நுட்பம் வேறு வந்துவிட்டது.

ஹைட்ரஜன் வாகனத்தில் இருக்கும் சிறப்பம்சம் இது இவி போல இல்லாமல் எளிதாக ரீஃபில் செய்து கொள்ள முடியும். ஒரு முறை ரீஃபில் செய்தால் நீண்ட தூரம் பயணிக்க முடியும். இந்த வாகனம் இந்தியாவிற்கு வருமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் விரைவில் இந்த வாகனம் மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

ஹைட்ரஜனை நேரடியாக சேமத்து எரிபொருளாக பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பான விஷயம் அல்ல. இதை எப்படி செய்யப்போகிறது. இது எவ்வளவு பாதுகாப்பானது என்ற விஷயத்தை மக்களிடம் எப்படி சொல்லி நம்பிக்கையை பெறப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரம் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஆனால் இதில் கம்பஷன் இன்ஜினிற்கு பதிலாக எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்த வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்கூட்டர் தொழிற்நுட்பத்தில் ஹைட்ரஜனை கொண்டு வருவது வரவேற்க தக்கது தான். ஆனால் அதன் பாதுகாப்பு தன்மை குறித்த சந்தேகம் பலருக்கு எழும். ஹைட்ரஜனை நேரடி வாயுவாய் சேமித்து வைப்பது ஆபத்தானது. இதை எப்படி அந்நிறுவனம் செய்கிறது என்ற விளக்கத்தை முதலில் அளித்தால் மக்கள் பயம் இல்லாமல் இதை வாங்குவார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 13, 2025, 8:15 [IST]
English summary
Suzuki burgman hydrogen scooter development details
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+