பொறுத்தது போதும்னு பொங்கி எழுகிறது சுஸுகி! டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா கதையை முடிக்க வருகிறது புது ஸ்கூட்டர்!
இந்திய சந்தையில் பல்வேறு முன்னணி டூவீலர் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. அத்துடன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடம் இருந்தும் கூட, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன. ஆனால் சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட விற்பனைக்கு களமிறக்கவில்லை.
ஆனால் இந்த குறை கூடிய விரைவில் நிவர்த்தியாகவுள்ளது. ஆம், இந்திய சந்தையில் சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என ரஸ்லேன் தளம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. சுஸுகி இ-ஆக்ஸஸ் (Suzuki e-Access) என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ வாகன திருவிழாவிலேயே, சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதை தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அடுத்த மாதம் சுஸுகி இ-ஆக்ஸஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.07 kWh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 95 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரைடிங் ரேஞ்ச் (Riding Range) அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை, வெறும் 2 மணி நேரம் 12 நிமிடங்களில், பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரப்பி விடலாம். அதே நேரத்தில் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 71 கிலோ மீட்டர்களாக இருக்கும். அதே சமயம் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச பவர் அவுட்புட் 4.1 Kw பவர் ஆகவும், 15 Nm டார்க் திறன் ஆகவும் உள்ளது.
டிசைனை (Design) பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல் நேர விளக்குகள், பின் பகுதியில் ஸ்டைலான எல்இடி டெயில்லைட் மற்றும் கவர்ச்சிகரமான அலாய் வீல்கள் போன்றவை எல்லாம், சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன. அத்துடன் நீளமான இருக்கை மற்றும் இருக்கைக்கு அடியில் ஓரளவிற்கு இடவசதி ஆகிய அம்சங்களையும் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுள்ளது.
சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 160 மிமீ ஆகும். அதே நேரத்தில் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 765 மிமீ ஆக இருக்கிறது.
இந்திய சந்தையில் டிவிஎஸ், ஹீரோ விடா, பஜாஜ், ஹோண்டா, ஏத்தர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக சுஸுகி இ-ஆக்ஸஸ் களமிறங்கவுள்ளது. சுஸுகி நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அல்லது 1.10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
பொதுவாக சுஸுகி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களில் ஃபிட் அண்ட் ஃபினிஷ் சிறப்பாக இருக்கும். அத்துடன் சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும் இருக்கும். இவை அனைத்தையும் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








