டிவிஎஸ், பஜாஜிற்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்! மார்க்கெட்டை மிரள விட வரும் புது ஸ்கூட்டர்!
இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மிக அதிகளவில் விற்பனையாக தொடங்கியுள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வரும் நிலையில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய தயாரிப்புகளை களத்தில் இறக்கி வருகின்றன.
ஆனால் சுஸுகி (Suzuki) நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சற்று தாமதமாக களமிறங்குகிறது. சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (First Electric Scooter), விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

சுஸுகி இ-ஆக்ஸஸ்தான் (Suzuki e-Access), இந்திய சந்தையில் சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஹரியானா (Haryana) மாநிலம் குர்கான் (Gurgaon) நகரில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலையில், சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு விட்டன.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூன்), சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாகன திருவிழாவில், சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3.07 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் (Lithium Iron Phosphate - LFP) பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 95 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இது நல்ல ரைடிங் ரேஞ்ச் (Riding Range) ஆக கருதப்படுகிறது.
போர்ட்டபிள் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை முழுமையாக நிரப்ப 6 மணி நேரம் மற்றும் 20 நிமிடங்கள் வரை ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இதை வெறும் 2 மணி நேரம் மற்றும் 12 நிமிடங்களிலேயே செய்து விடலாம்.
சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4.1 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 71 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். அத்துடன் சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படவுள்ளன.
இதில், கீலெஸ் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் 4.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், யூஎஸ்பி போர்ட் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன் இதன் இருக்கைக்கு அடியில் 17 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியும் உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் ரிவர்ஸ், ஈக்கோ, ரைடு மோடு ஏ மற்றும் ரைடு மோடு பி என மொத்தம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 4 ரைடிங் மோடுகளும் (Riding Modes) வழங்கப்படவுள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இதன் விலை (Price) எவ்வளவு? என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிந்து விடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சுஸுகி இ-ஆக்ஸஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை, பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak), டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube), ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) மற்றும் ஓலா எஸ்1 (Ola S1) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








