ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டரை வீட்டுக்கு அனுப்ப இவ்ளோ வேகமா.. நல்ல விழா நாளுக்காக காத்திருக்கும் சுஸுகி இ-அக்செஸ்

ஹோண்டா ஆக்டிவா இ: (Honda Activa e:), எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகின்றன. இன்னும் இந்த வாகனம் நாடு தழுவிய அளவில்கூட விற்பனைக்கு வரவில்லை. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. மேலும், இதன் டெலிவரி பணிகளும்கூட இன்னும் நாட்டில் தொடங்கப்படவில்லை. இப்போதே அது ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருக்கின்றது.

சூழல் இப்படியாக இருக்க ஆக்டிவா இ: ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் பணியில் ஹோண்டா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான சுஸுகி (Suzuki) மிக தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் வாயிலாகவே ஆக்டிவா இ: ஸ்கூட்டர் மாடலுக்கு டஃப் கொடுக்க இருக்கின்றது.

Suzuki e access launch expected in 2025

இ-ஆக்சஸ் (e-Access) இதுவே அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர ஓர் நல்ல நாளுக்காகவே நிறுவனம் காத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், வரும் திருவிழா நாட்களில் இது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வாகனத்தை ஏற்கனவே சுஸுகி நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்துவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாகவே இந்த ஆக்டிவா இ: மாடலுக்கான போட்டியாளன் இ-ஆக்செஸ்ஸை சுஸுகி வெளியீடு செய்தது.

இதற்கு அப்போதே பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே இது விற்பனைக்கு வர இன்னும் சில நாட்கள இருக்கின்றன என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே சீக்கிரமே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளை சுஸுகி இரண்டு சக்கர வாகன விற்பனையாளர்கள் நாட்டில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகஸ்டு 15 அல்லது தீபாவளி பண்டிகையின்போது இது விற்பனைக்கு வந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹோண்டா ஆக்டிவா இ: மாடலுக்கு மட்டுமல்ல டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ரிஸ்தா, பஜாஜ் சேத்தக், ஓலா எஸ்1 மற்றும் ஹீரோ விடா உள்ளிட்டவற்றிற்கும் போட்டியாக அமையும்.

இந்த ஸ்கூட்டரில் 3.07 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே சுஸுகி வழங்க இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 95 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 71 கிமீ என கூறப்படுகின்றது.

4.1 kW திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையே இதில் சுஸுகி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. வீட்டில் வைத்து சார்ஜ் செய்கையில் இந்த ஸ்கூட்டரை வெறும் ஐந்து மணி நேரங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது சிறந்த பிரேக்கிங் செட்-அப் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவற்றையும் இந்த வாகனத்தில் சுஸுகி வழங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலரே இதுவாகும். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இது தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 4, 2025, 17:37 [IST]
English summary
Suzuki e access electric scooter set for 2025 launch competing with honda activa e and others
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+