ஒரு தடவை சார்ஜ் போட்டா 95 கி.மீ போகும்! சுஸூகின் இந்த வண்டி இனி ஊரெல்லாம் ஓடும்!

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. ஏற்கனேவ பெட்ரோல் வெர்ஷனில் விற்பனையாகி வரும் ஆக்ஸெஸ் என்ற ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இன்று வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான மோகம் அதிமாகி வரும் நிலையில், இந்த ஸ்கூட்டர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

சுஸுகி இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக, சுஸுகி e-Access-என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆட்டோ எக்ஸ்போ 2025-ல் வெளியிட்டுள்ளது. e-Access 3.07 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது IDC-ன் அதிகாரப்பூர்வ ரேஞ்சின் படி 95 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இதில் 4.1 kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது., இது 15 Nm டார்க் திறனை வழங்குகிறது மற்றும் 71 kmph டாப் ஸ்பீடில் பயணிக்கும் திறன் கொண்டது.

Suzuki e-Access Unveiled

இந்த ஸ்கூட்டரை சார்ஜ் செய்ய 240W கையடக்க சார்ஜரைக் கொண்டு பேட்டரியை 0 முதல் 80% வரை சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். அதேசமயம் முழுமையாக சார்ஜ் ஏற 6 மணி நேரம் 42 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இருப்பினும், ஃபாஸ்ட் சார்ஜருடன், 80% சார்ஜ்க்கு 1 மணி நேரம் 12 நிமிடங்கள் மற்றும் முழு சார்ஜ்க்கு 2 மணி நேரம் 12 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

வடிவமைப்பு மற்றும் அம்சங்களை பொருத்தவரை
சுஸுகி e-Access ஸ்கூட்டரை முற்றிலுமாக புதிய தளத்தில் வடிவமைத்துள்ளது, இதில் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் மற்றும் பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் டைப் சஸ்பென்சன் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இது 12-இன்ச் அலாய் வீல்களில் முன்புறம் 90/90 மற்றும் பின்புறம் 100/80 டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை டிஸ்க்/டிரம் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. 122 கிலோ எடையுடன், இது தனது பிரிவில் உள்ள மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் போட்டியிடுகிறது.

Suzuki e-Access Unveiled

e-Access-ன் சீட் உயரம் 765 மிமீ அளவில் அமைக்கப்பட்டுள்ளது, இது பல்வேறு ரைடர்களுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும். இந்த மாடலில் அனைத்து லைட்டுகளும் எல்இடி லைட்டுகளாக பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஸ்கூட்டரின் அளவுகளை பொருத்தவரை 1800 மிமீ நீளம், 715 மிமீ அகலம், 1140 மிமீ உயரம் மற்றும் 1305 மிமீ வீல் பேஸை கொண்டதாக இருக்கிறது.

செயல்திறன் மற்றும் அம்சங்களை பொருத்தவரை
சுஸுகி e-Access, அதன் திறமையான பேட்டரி மற்றும் மோட்டார் அம்சங்களுடன் சிட்டி பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. ஸ்கூட்டரின் வடிவமைப்பு, அதன் நன்றாக வடிவமைக்கப்பட்ட சஸ்பென்சன் செட்டப் மற்றும் டயர் கட்டமைப்பின் காரணமாக ரைடுகளின் போது ஸ்டெபிலிட்டி மற்றும் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ரிமோட் மூலம் பெட்ரோல் டேங்கை திறக்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

Suzuki e-Access Unveiled

சுஸுகி மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழைவது போட்டியாளர்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படும் என்பதை ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நடைமுறை மற்றும் செயல்திறன் மீதான கவனம், சிட்டி ரைடர்களுக்கும், மாசு இல்லாத வாகனத்தை தேடுபவர்களுக்கும் e-Access பிரபலமான தேர்வாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அம்சங்களுடன், சுஸுகி அதன் வகுப்பில் போட்டித்தன்மை வாய்ந்த செயல்திறன் மற்றும் தரத்தை பராமரித்துக்கொண்டே சிட்டி பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வாகனம் நேரடியாக ஹேண்டா ஆக்டிவா இ, பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏத்தர் ரிஸ்டா, ஓலா எஸ்1 ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸூகி எலெக்ட்ரிக் வாகன உலகில் அடியெடுத்துவைத்துள்ளது வரவேற்க்கதக்கதுதான். இந்நிறுவனம் மார்கெட்டில் போட்டியில் இருக்கும் மற்ற நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேம்பட்ட தயாரிப்புகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மார்கெட்டில் இந்நிறுவனத்திற்கு தனி இடம் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 15:31 [IST]
English summary
Suzuki e access unveiled bharat mobility global expo 2025 95 km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X