ரூ. 93,200 மட்டுமே.. புதிய சுஸுகி அவெனிஸ், பர்க்மேன் ஸ்கூட்டர்கள் அறிமுகம்.. ஸ்பெஷல் எடிசனிலும் கிடைக்கும்!!!

முன்னணி இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான சுஸுகி (Suzuki), ஓபிடி-2பி (OBD-2B) தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அவெனிஸ் (Avenis) மற்றும் பர்க்மேன் (Burgman), ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அவெனிஸ் மாடலுக்கு ரூ. 93 ஆயிரத்து 200-ம், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் மாடலுக்கு ரூ. 95 ஆயிரத்து 800-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஆன்ரோடில் சற்றே அதிக விலையை இதுக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. ஓபிடி-2பி, இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்ட புதிய விதியே இதுவாகும். நிகழ்நேரத்தில் வாகனம் என்ன மாதிரியான அளவில் புகையைக் கக்குகின்றது என்கிற தகவலை ஒளிவு - மறைவுகள் இன்றி காட்டக் கூடிய கருவியை புதிய வாகனங்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்பதையே இந்த புதிய விதி கூறுகின்றது.

Suzuki launches obd-2b avenis scooter

சுஸுகி அவெனிஸ்: இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் வழக்கமான பதிப்பு மற்றும் ஸ்பெஷல் எடிசன் என இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலே பார்த்தது வழக்கமான பதிப்பின் விலை ஆகும். அதேவேளையில் சிறப்பு பதிப்பு அவெனிஸ் ரூ. 94 ஆயிரம் எனும் விலையில் விற்கப்பட இருக்கின்றது.

இந்த பதிப்பின் இருக்கை மிகவும் அழகானதாக உள்ளது. இரண்டு விதமான வண்ணங்களால் அதை சுஸுகி அலங்கரித்துள்ளது. இத்துடன், மெட்டாலிக் மேட் நிறத்தாலும், மேட் டைட்டானியம் சில்வர் நிறத்தாலும் இதனை அழகுப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிற அலங்கரிப்பு சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

Suzuki launches obd-2b burgman scooter

எஞ்சினைப் பொருத்த வரை 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் 124.3 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிக ஆற்றலை பெரிய அளழில் இரைச்சல் இல்லாமலேயே இது வழங்கும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி மற்றும் 10 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல அதிக மைலேஜையும் வழங்கும். இத்துடன், பிரீமியம் அம்சங்களையும் மிக அதிக அளவில் இது தாங்கி இருக்கும்.

சுஸுகி பர்க்மேன்: இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும், பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இரண்டிலும் ஒரே மாதிரியான மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், அவை சற்றே மாறுபட்ட ஆற்றலை உருவாக்கும்.

முழு அலுமினியத்தால் தயாரிக்கப்பட்ட 4 ஸ்ட்ரோக் 124 சிசி எஞ்சினே பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் பர்க்மேன் ஸ்ட்ரீட் வேரியண்டில் 8.7 பிஎஸ் மற்றும் 10 என்எம் டார்க்கை வழங்கும். இதற்காக சுஸுகி ஈகோ ஃபெர்ஃபார்மென்ஸ் எனும் அம்சம் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் மாடலில் சுஸுகி ஈகோ பெர்ஃபார்மென்ஸ் ஆல்ஃபா அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது ஆட்டோ எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் சத்தமே இல்லாமல் எஞ்சின் இயங்குதல் உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கும். 8.6 பிஎஸ் மற்றும் 10 என்எம் டார்க் ஆற்றலையே பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் வேரியண்ட் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி நிறுவனத்தின் இந்த இரண்டு தயாரிப்புகளுக்கும் இந்தியர்கள் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது சிறப்பு பதிப்புகள் அதில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இவற்றிற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 24, 2025, 20:31 [IST]
English summary
Suzuki launches obd 2b compliant avenis and burgman scooters starting price rs 93200
மேலும்... #suzuki motorcycle #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+