இந்த சுஸுகி பைக் இருந்ததையே இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் மறந்துருவாங்க! சைலண்ட்டா விற்பனை நிறுத்தம்!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிரபலமான கடனா (Katana) பைக்கின் விற்பனையை எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், சைலண்ட்டாக நிறுத்திக் கொண்டுள்ளது. ஜூலை 2022-ல் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே கடனா பைக் இந்தியாவில் விற்பனையில் இருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காலம் மட்டுமே விற்பனையில் இருந்தபோதிலும், 1980ஆம் காலக்கட்ட வடிவமைப்பிலும், நவீன தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்ட சுஸுகி கடனா பைக் இந்தியாவிலும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தது. கடனா விற்பனையில் இருந்து நீக்கப்பட்டாலும், நான்கு சிலிண்டர் கொண்ட ஹயாபுசா (Hayabusa) சூப்பர்பைக் இந்தியாவில் தொடர்ந்து விற்பனையில் உள்ளது.

suzuki katana bike discontinues

சுஸுகி ஹயாபுசா பைக்கின் நேக்டு வெர்சன் தான் கடனா ஆகும். கடனா பைக்கில் 999சிசி, நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது 152 பிஎச்பி இயக்க ஆற்றலையும் 106 என்எம் டார்க்கையும் வெளியிடக் கூடியது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இந்த என்ஜின் வழங்கப்பட்டு வந்த கடனா பைக்கில் ரைட்-பை-வயர், சுஸுகி ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம், லோ ஆர்பிஎம் அசிஸ்ட் போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் இருந்தன.

இவை மட்டுமின்றி, டிராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control), ரைடு மோட்கள் (Ride Modes), முன்பக்கத்தில் செங்குத்தான டிசைனில் எல்இடி ஹெட்லைட், தனித்துவமான டிஸ்பிளே உடன் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த கடனா பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகள், பின்பக்கத்தில் இணைக்கப்பட்ட மோனோஷாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

suzuki katana bike discontinues

இந்தியாவில் கடனாவின் கடைசி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.13.61 லட்சமாக இருந்தது. குறைந்த விற்பனை காரணமாக கடந்த மூன்று வருடங்களில் பல சமயங்களில் கடனா பைக்கிற்கு இந்தியாவில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. சுஸுகி கடனாவை நிறுத்தியதால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி (Honda CB1000 Hornet SP) தற்போது இந்த பிரிவில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறது.

தற்போது சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ஜி.எஸ்.எக்ஸ்-8ஆர் (GSX-8R), வி-ஸ்ட்ரோம் 800டிஇ (V-Strom 800DE) மற்றும் ஹயாபுசா ஆகிய மூன்று பெரிய பைக்குகளை மட்டுமே விற்பனை செய்கிறது. சிறிய ரக பைக்குகளில் ஜிக்ஸர் (Gixxer), ஜிக்ஸர் எஸ்.எஃப் (SF), ஜிக்ஸர் 250, ஜிக்ஸர் எஸ்.எஃப்250 மற்றும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் (SX) ஆகியவை உள்ளன.

suzuki katana bike discontinues

1000சிசி சூப்பர்நேக்ட் பிரிவில் கடனா மட்டுமே சுஸுகியின் ஒரே தேர்வாக இருந்தது. கடனாவின் சேசிஸ் பாகங்கள் ஜி.எஸ்.எக்ஸ்-எஸ்1000 சூப்பர்நேக்ட் பைக்கை ஒத்திருந்தன. எனினும், கடனா பைக்கின் 1980-களின் பாணியிலான வடிவமைப்பு தனித்துவமானது. ஹோண்டாவின் சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக் ரூ.12.36 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) சுஸுகி கடனாவிற்கு முக்கிய போட்டியாளராக இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடனா ஒரு வேகமான மற்றும் கவர்ச்சிகரமான பைக்காக இருந்தும், இந்தியாவில் பெரிய பைக் விற்பனையில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. சுஸுகி கடனா வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதற்கு, அதன் அதிக விலை மற்றும் போட்டி நிறைந்த சந்தை சூழலும் காரணமாக இருக்கலாம்.

சுஸுகி பைக்குகளுக்கே உண்டான இன்லைன்-4 சிலிண்டர் என்ஜினின் சத்தம் மற்றும் ஜப்பானிய நம்பகத்தன்மை போன்ற அம்சங்கள் இருந்தபோதிலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் கடனா பைக் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடனா விற்பனை நிறுத்தத்திற்கு சுஸுகி சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், எதிர்பார்த்த எண்ணிக்கையிலான கடனா பைக்குகள் விற்பனையாகாதது தான் விற்பனை நிறுத்தத்திற்கு காரணமாக இருக்கும்.

இப்போது சுஸுகியின் இன்லைன்-4 என்ஜின் உடன் பைக் வாங்க வேண்டுமானால், ரூ.16.90 லட்சம் விலையுள்ள ஹயாபுசாவை வாங்க வேண்டும். சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000ஆர் சூப்பர்பைக்கை மீண்டும் கொண்டு வருவதாக கூறப்பட்டாலும், அது இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனால் சுஸுகியின் 1000சிசி பிரிவில் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 12, 2025, 21:59 [IST]
English summary
Suzuki motorcycle discontinues katana bike in india check all details here
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X