ஒரே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் நம்பி வந்து இருக்காங்க! சுஸுகி 2வீலர்களின் ரேஞ்ச் எங்கேயோ போகுது

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India - SMIPL) நிறுவனம் 2025 நவம்பர் மாத விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் 1 லட்சத்து 22,300 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 94,370 இருசக்கர வாகனங்களை விட 29.60% (27,930 யூனிட்கள்) அதிகரிப்பு ஆகும்.

இந்தியச் சந்தையில் சுஸுகி 2-வீலர்களின் தேவை அதிகரித்து, 96,360 யூனிட்கள் விற்பனையாகி, 23.01% உயர்வு கண்டுள்ளது. அதேபோல், ஏற்றுமதியும் கணிசமாக 61.75% அதிகரித்து 25,940 யூனிட்களை எட்டி உள்ளது. இது 2024 நவம்பர் மாதத்தின் 16,037 யூனிட்களை காட்டிலும் அதிகம் ஆகும்.

suzuki motorcycle india november 2025 sales report

இருப்பினும், 2025 அக்டோபர் மாதத்தில் 1,29,261 யூனிட்கள் என்ற அதிகபட்ச விற்பனைக்குப் பிறகு, நவம்பரில் 5.39% மாதாந்திர சரிவை சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் சந்தித்துள்ளது. உள்நாட்டு விற்பனை 6.86% குறைந்து 93,360 யூனிட்களாக சரிந்ததே இதற்குக் காரணம் ஆகும். அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏற்றுமதி 0.52% மட்டும் வளர்ச்சி பெற்றுள்ளது.

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் துணைத் தலைவர் தீபக் முத்ரேஜா கூறுகையில், "வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும், டீலர் நெட்வொர்க்கின் ஆதரவுக்கும் நாங்கள் நன்றியுள்ளோம். எங்கள் வளர்ச்சிக்கு இதுவே உந்துசக்தி. வசதி, விற்பனைக்குப் பிந்தைய சேவை, சமூக கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறோம்" என்றார். நவம்பரில் சுஸுகி மோட்டார்சைக்கிளின் உதிரிபாக விற்பனை ரூ.95.5 கோடியை எட்டியது.

suzuki motorcycle india november 2025 sales report

2025 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டில், சுஸுகி 9,39,735 இருசக்கர வாகனங்களை விற்று இந்த நிறுவனம் 12.63% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டின் இதே 8 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட 8,34,370 இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடுகையில், 1,05,365 யூனிட்கள் அதிகமாகும்.

Suzuki 2W Sales Nov-25 Nov-24 Diff Growth % YoY % Share Nov 25
Domestic 96,360 78,333 18,027 23.01 78.79
Exports 25,940 16,037 9,903 61.75 21.21
Total 1,22,300 94,370 27,930 29.60 100.00
Suzuki 2W Sales Nov-25 Oct-25 Diff Growth % MoM % Share Oct 25
Domestic 96,360 1,03,454 -7,094 -6.86 80.03
Exports 25,940 25,807 133 0.52 19.97
Total 1,22,300 1,29,261 -6,961 -5.39 100.00
Suzuki 2W Sales FY YTD YoY Diff Growth % YoY % Share FY 26
Domestic 7,70,286 6,99,803 70,483 10.07 81.97
Exports 1,69,449 1,34,567 34,882 25.92 18.03
Total 9,39,735 8,34,370 1,05,365 12.63 100.00

சுஸுகியின் புதிய தயாரிப்புகள், மேம்பாடுகள் இந்த உயர்வுக்குக் காரணம் ஆகும். கடந்த ஏப்ரல்- நவம்பர் வரையிலான 8 மாதங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிளின் உள்நாட்டு விற்பனை 7,70,286 (10.07% உயர்வு) ஆகவும், ஏற்றுமதி 1,69,449 (25.92% உயர்வு) ஆகவும் பதிவாகி உள்ளது. கடந்த மாதம், சுஸுகி பல நிகழ்ச்சிகளை நடத்தியது.

suzuki motorcycle india november 2025 sales report

வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் (V-Strom SX) என்கிற அட்வென்ச்சர்-டூரர் பைக்கின் பல திறமைகளை அறிந்துகொள்ள உதவும் வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் அனுபவ தினம் (Experience Day) இதில் அடங்கும். லக்னோ மற்றும் சூரத் நகரங்களில் நடந்த இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் பங்கேற்று வாகனத்தின் ஹேண்ட்லிங் மற்றும் செயல்திறனை அனுபவித்தனர்.

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஹரியானாவின் குருகிராமில் உள்ள கெர்கி தௌலா தொழிற்சாலையில் 2006 பிப்ரவரியில் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்த ஆலையின் வருடாந்திர உற்பத்தி திறன் 13 லட்சம் யூனிட்டுகள் ஆகும். இது 125சிசி ஸ்கூட்டர்கள், 150சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் பெரிய என்ஜின் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தைக்காக உற்பத்தி செய்கிறது.

suzuki motorcycle india november 2025 sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே மாதத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, சுஸுகி மோட்டார்சைக்கிளின் உள்நாட்டு விற்பனை 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் பதிவாகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 3, 2025, 11:36 [IST]
English summary
Suzuki motorcycle india november 2025 sales report check all details here
மேலும்... #suzuki motorcycle #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X