ரோட்டுல ஒரு வண்டிய கூட பார்க்க முடியல! ஆனா 31 நாளில் 1.13 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க!
சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை விற்பனை செய்து கம்பேக் குடுத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 31 நாளில் 1.13 லட்சம் டூவீலர்களை விற்பவனை செய்துள்ளது. ரோட்டுல இந்த கம்பெனி வண்டி ஓடுவது போலவே தெரியவில்லை ஆனால் இவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது ஆகஸ்ட் மாதம் துவங்கியுள்ள நிலையில் சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 1,13,600 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியான வாகனங்களின் விபரம் ஆகும்.

இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் உள் நாட்டில் மட்டும் மொத்தம் 96,029 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,00,602 வாகனங்களை விற்பனை விற்பனை செய்திருந்தது. தற்போது 4.5 சதவீதம் உள்நாட்டு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதியை பொருத்தவரை இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 17,571 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 16,112 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இந்த செக்மெண்டில் 9 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆண்டு ஜூலை மாதம் 1,13,600 வாகனங்கள் மொத்தமாக விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 1,16,714 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 2.7 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
பலருக்கு கடந்த 31 நாளில் 1.13 லட்சம் வானங்கள் விற்பனையாகியுள்ளது ஆச்சரியமாக இருக்கலாம். ரோட்டில் பெரியதாக இந்த நிறுவனத்தின் வாகனங்களை பார்க்க முடிவதில்லை ஆனால் எப்படி இவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற கேள்வி பலருக்க எழலாம். ஆனால் ஆக்ஸஸ் 125 பர்க்மேன் ஸ்டிரீட் போன்ற ஸ்கூட்டர்கள் விற்பனை தான் இந்த அதிக விற்பனைக்கு துணை நிற்கின்றன.

இந்நிறுவனம் ஏற்றுமதியில் குறிப்பிட்ட அளவு விற்பனை அதிகரித்திருப்பதை காண முடிகிறது. 9 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதே நேரம் உள்நாட்டு விற்பனையில் தேக்கமடைந்திருந்தாலும், தொடர்ந்து இந்நிறுவனத்தின் மார்கெட்பங்கு அதிகரித்து வருகிறது. வரும் பண்டிகை காலங்களில் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் விற்பனையில் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தான் சிறப்பான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்கின்றன. அதற்கு போட்டியாக விரைவில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









