வருஷம் முடிவதற்குள் பழைய ஸ்டாக்கை க்ளீயர் செய்வதுதான் முதல் டார்க்கெட்! சென்னையில் இப்படியொரு சுஸுகி ஷோரூமா?

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India), அதிக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி ஜப்பானிய நிறுவனம். இந்திய சந்தையில் பலத்தரப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் டீலர்ஷிப் நெட்வொர்க் உள்ளது. அந்த வகையில் சென்னையிலும் பல இடங்களில் சுஸுகி 2-வீலர் ஷோரூம்கள் செயல்படுகின்றன.

அவ்வாறு சென்னையில் செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள் ஷோரூம்களில் ஒன்றுதான், ஆயிரம் விளக்கு பகுதியில் க்ரீம்ஸ் சாலையில் உள்ள 'ஏரோவீல் சுஸுகி' (AeroWheel Suzuki) ஆகும். சென்னையின் மைய பகுதியில் மிக சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த சுஸுகி ஷோரூம் ஆனது இந்தியாவிலேயே முதல்முறையாக சுஸுகி ஸ்கூட்டர்கள், மோட்டார்சைக்கிள்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆக்ஸஸரீகள் என எல்லாமே ஒரே குடையின் கீழ் கிடைக்கும் ஷோரூம் ஆக விளங்குகிறது.

suzuki year-end offers

சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான இ-ஆக்ஸஸ் (e-Access) ஸ்கூட்டர் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அது வந்ததும் முதலாவதாக இந்த சென்னை ஷோரூமில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் ஷோரூம் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த ஷோரூமில் 2025 வருட இறுதி மற்றும் கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சுஸுகி ஜிக்ஸெர் 150 (Gixxer 150) மற்றும் 250 பைக்குகளை வாங்குவோர், ரூ.12,000 வரையிலான சலுகைகளை இந்த சுஸுகி 2-வீலர் ஷோரூமில் பெறலாம். இதில், ரூ.8,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.2,000 மதிப்பிலான ஆக்ஸஸரீகள் (Accessories) மற்றும் ரூ.1,000 மதிப்பிலான நிச்சய பரிசு உள்ளிட்டவற்றுடன், எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus), கார்ப்பிரேட் போனஸ் (Corporate Bonus) உள்ளிட்டவை அடங்குகின்றன.

suzuki year-end offers

ஜிஎஸ்டி (GST) திருத்தத்திற்கு முன்பு வரையில் ஜிக்ஸெர் 250 பைக்கின் ஆன்-ரோடு விலை (On-Road Price) ரூ.1.80 லட்சம் - ரூ.1.90 லட்சம் வரை இருந்தது. அது கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 திருத்தத்திற்கு பிறகு ரூ.15,000- ரூ.16,000 அளவிற்கு குறைந்து ரூ.1.70 லட்சம் என்கிற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், சுஸுகி வி-ஸ்டோர்ம் எஸ்.எக்ஸ்250 (V-Storm SX250) பைக்கிற்கு ரூ.10,000 அளவிலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சுஸுகியின் சூப்பர் பைக்கான ஜி.எஸ்.எக்ஸ் 8ஆர் (GSX 8R) பைக்கிற்கு ரூ.60,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுவதாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள இந்த ஷோரூம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

suzuki year-end offers

ரூ.60,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை பெற 250சிசி-க்கு மேற்பட்ட பைக்கை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Extended Warranty), சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் திடீர் பழுதுக்கான உதவி (Road-side Assitance) ஆகியவை சேர்த்து, இந்த சுஸுகி ஷோரூமில் ஜிஎஸ்எக்ஸ் 8ஆர் பைக்கிற்கு சுமார் ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம்.

இந்த சுஸுகி சூப்பர் பைக்கின் ஆன்-ரோடு விலை இந்த ஷோரூமில் ரூ.12.10 லட்சம் அளவிற்கு வருகிறது. இவை மட்டுமின்றி, இந்த குறிப்பிட்ட ஷோரூமில் இன்னும் சில சலுகைகள் வருட இறுதியை முன்னிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழேயுள்ள வீடியோவில் அறியலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை ஒரு முக்கியமான சந்தையாகும். இதனாலேயே இவ்வாறு புது, புது டீலர்ஷிப் ஷோரூம்களை சென்னையிலும், சென்னையை சுற்றிலும் திறந்து வருகிறது. அவ்வாறு க்ரீம்ஸ் சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமில் சலுகைகளை பயன்படுத்தி இருசக்கர வாகனங்களை வாங்கி மகிழலாம். மேலும், வரவிருக்கும் பொங்கல் (Pongal) பண்டிகையை முன்னிட்டும் இந்த ஷோரூமில் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 23, 2025, 17:38 [IST]
English summary
Suzuki year end offers at new aerowheel suzuki showroom greams road chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X