லட்சகணக்குல பைக் விக்குற கம்பெனி எதுலாம் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ!
இந்தியாவில் டூவீலர் விற்பனை மிக அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் பல நிறவனங்கள் அதிக அளவிலான டூவீலர்களை விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது. இப்படியாக கடந்த நவம்பர் மாதம் அதிக டூவீலர்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
10. கிரீவிஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி
கிரீவிஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 5764 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 4471 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 28.32 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

9 ஓலா எலெக்ட்ரிக்
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எலெக்ட்ரிக் டூவீலரை விற்பனை செய்யும் நிறுவனமாக ஓலா இருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 8402 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 29322 வாகனங்களை விற்பனைசெய்துள்ளது. இது 71.35 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.
8. ஏத்தர் எனர்ஜி
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 20,349 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 12963 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 56.98 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

7. யமஹா மோட்டார்
யமஹா நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 70,929 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 68574 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 3.43 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
6. சுஸூகி மோட்டார் சைக்கிள்
சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 1,04,638 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 92,548 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 13.06சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.

5. ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம்1,15,353 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 96,302வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 19.78சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
4. பஜாஜ் ஆட்டோ
பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 2,58,585 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 3,05,253 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 15.29 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
3. டிவிஎஸ் மோட்டார் கம்பெனி
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 4,45,617வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 4,23,078வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 5.33 சதவீத விற்பனை வளர்ச்சியாகும்.
2. ஹோண்டா மோட்டார் சைக்கிள்
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 6,06,284 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 6,57,115 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 7.74 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.
1. ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 8,86,002 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு நவம்பர் மாதம் 9,17,174வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 3.40 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கார்களை விட டூவீலர்கள் தான் அதிகம் விற்பனையாகி வருகிறது.இந்தியாவில் அதிகம் டூவீலர்களை விற்பனை செய்யமு் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் இது தான். இதில்உங்களுக்கு பிடித்த நிறுவனத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









