எவ்வளவு வேகமா வந்திச்சோ அதே வேகத்தில் சரியும் ஓலா! பஜாஜ், டிவிஎஸ் பக்கம் தான் மக்கள் போறாங்க!

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ வாங்கும் அளவிற்கு இன்னும் நம் மக்களில் நிறைய பேர் தயாராக இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால், அதேநேரம் எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஐ வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலமாகவே, முழுக்க முழுக்க எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் நம்பி பிஸ்னஸ் செய்யும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) இந்தியாவில் அதிக இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் டாப்-10 நிறுவனங்களுள் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

சமீப காலமாக எலக்ட்ரிக் பைக்குகள் (Electric Bikes)-க்கும் நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. அல்ட்ராவொய்லெட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஷாக்வேவ் (Shockwave) எலக்ட்ரிக் பைக்கின் வருகையால் இந்த டிமாண்ட் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இப்படிப்பட்ட சூழலில்தான், நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

top-10 electric 2-wheeler brands

இந்தியாவில் தற்சமயம் 20க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே தான் போகிறது. இவற்றில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 76 ஆயிரத்து 86 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனை எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என ஆச்சிரியப்பட வேண்டாம்.

ஏனெனில், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் இதனை காட்டிலும் அதிகமாக 82 ஆயிரத்து 745 எலக்ட்ரிக் 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் இன்னும் அதிகமாக கிட்டத்தட்ட சுமார் 1 லட்ச எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ முதலிடத்தை பிடித்துள்ளது. இத்தனைக்கும் பஜாஜில் இருந்து சேத்தக் என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

top-10 electric 2-wheeler brands

இருப்பினும், 21 ஆயிரத்து 389 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து பஜாஜ் முதலிடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த ஆண்டுகளில், இந்த முதலிடத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பிடித்துவந்தது. கடந்த 2024 பிப்ரவரியில் கூட 34 ஆயிரத்து 63 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை உடன் ஓலா எலக்ட்ரிக் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக ஓலாவின் விற்பனை ஒரேடியாக சரிந்து வருகிறது.

2024 பிப்ரவரியில் வெறும் 11 ஆயிரத்து 764 சேத்தக் ஸ்கூட்டர்களை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 2வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் 18 ஆயிரத்து 762 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை உடன் உள்ளது. பஜாஜை போலவே டிவிஎஸ் மோட்டாரில் இருந்தும் ஐக்யூப் என்கிற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்கடுத்து 3வது இடத்தில் ஏத்தர் எனர்ஜி உள்ளது.

top-10 electric 2-wheeler brands

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே தற்போதுவரையில் விற்பனை செய்துவரும் ஏத்தரில் இருந்து கடந்த மாதத்தில் 11 ஆயிரத்து 807 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஓலா எலக்ட்ரிக்கில் இருந்து கடந்த மாதத்தில் வெறும் 8 ஆயிரத்து 647 எலக்ட்ரிக் 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஓலா தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்தது; இன்னும் டெலிவிரிகள் துவங்கப்படவில்லை.

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில், ஆம்பியர் 3,700 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உடனும், 6வது இடத்தில் ஹீரோ விடா 2,678 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உடனும் உள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களில் புர் இவி மற்றும் பிகாஸ் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,566 மற்றும் 1,218 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் கைனெட்டிக் (765) மற்றும் ரிவோல்ட் (760) உள்ளன.

top-10 electric 2-wheeler brands

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் பெரியதாக பிரபலம் இல்லாத நிறுவனங்களில் இருந்து மட்டும் 4 ஆயிரத்து 191 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்தமாக எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை கடந்த மாதத்தில் குறைந்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும். புதிய எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகத்தால் வரும் மாதங்களில் இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 12, 2025, 8:00 [IST]
English summary
Top 10 electric 2 wheeler brands of india in february 2025 sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X