ரூ5,000-ரூ7,000 வரை ரேட் குறையுது! டாப் 10 ஸ்கூட்டர்கள் லிஸ்ட் இதோ!
இந்தியாவில் செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. இதுவரை வாகனங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி பெரும்பாலான வாகனங்களுக்கு 18 சதவீதமாக குறைகிறது. இதன்படி இந்தியாவில் ஸ்கூட்டர்கள் பிரபலமாகி விற்பனையாகி வரும் சூழ்நிலையில் டாப் 10 வாகனங்களின் தற்போதைய விலை மற்றும் புதிய விலை விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 125 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ81,000த்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் ரூ74,250க்கு விற்பனையாகும். வித்தியாசம் ரூ6750. அடுத்தாக டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது ரூ77,000 த்திற்கு விற்பனையாகி வருகிறது. இனி ரூ70,667க்கு விற்பனையாகும், ரூ6,333 வித்தியாசம்.

சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது ரூ 79,500க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் இனி ரூ72,889 என்ற விலையில் விற்பனையாகும். வித்தியாசம் ரூ6,611. ஹீரோ மீஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ76,500க்கு விற்பனையாகி வருகிறது. இது இனி ரூ70,111க்கு விற்பனையாகும். வித்தியாசம் ரூ6,389ஆகும்.
டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை இதுவரை ரூ85,000த்திற்கு விற்பனையாகி வந்தது. இந்த கார் இனி ரூ77,778க்கு விற்பனையாகும். வித்தியாசம் ரூ7,222. சுஸூகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது ரூ82,000த்திற்கு விற்பனையாகி வருகிறது. இனி இது ரூ75,556க்கு விற்பனையாகும். வித்தியாசம் ரூ6,444.

| மாடல் | தற்போதய விலை (ரூபாயில்) | புதிய விலை (ரூபாயில்) | வித்தியாசம் (ரூபாயில்) |
| ஆக்டிவா 125 | 81,000 | 74,250 | 6,750 |
| ஜூபிடர் 125 | 77,000 | 70,667 | 6,333 |
| ஆக்ஸஸ் 125 | 79,500 | 72,889 | 6,611 |
| மீஸ்ட்ரோ எட்ஜ் 125 | 76,500 | 70,111 | 6,389 |
| என்டார்க் 125 | 85,000 | 77,778 | 7,222 |
| டியோ 125 | 72,000 | 65,778 | 6,222 |
| பர்க்மேன் ஸ்டிரீட் 125 | 82,000 | 75,556 | 6,444 |
| ஃபேஸினோ 125 | 76,000 | 70,667 | 5,333 |
| டெஸ்டினி 125 | 74,500 | 69,111 | 5,389 |
| அப்ரிலியா எஸ்ஆர் 125 | 95,500 | 88,148 | 6,852 |
யமஹா ஃபேஸினோ 125 ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது ரூ76,000த்திற்கு விற்பனையாகி வருகிறது. இனி ரூ70,667க்கு விற்பனையாகும். வித்தியாசம் ரூ5,333, ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டரை பொருத்தவரை ரூ74,500க்கு விற்பனையாகி வருகிறது. இனி ரூ69,111 க்கு விற்பனையாகும் வித்தியாசம் ரூ5389 . அப்ரிலியாஎஸ் ஆர் 125 ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது ரூ95,000 த்திற்கு விற்பனையாகி வருகிறது. இனி ரூ88,148த்திற்கு விற்பனையாகி வருகிறது. ரூ6852 வித்தியாசம்.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பால் வாகன விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் ஸ்கூட்டர்களின் விலை பெரும்பாலும் ரூ5,000 முதல் ரூ7,000 வரை விலை குறைகிறது. இதனால் ஸ்கூட்டர்களின் விற்பனை கணிசமாக அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். பலர் இந்த விலை குறைவிற்காக காத்துக்கொண்டிருக்கார்கள்.
பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் 22ம் தேதிக்கு பிறகு அதிக விற்பனை வந்தாலும் அனைவருக்கும் டெலிவரி செய்ய தயாராகி வருகின்றனர். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாத இறுதியில் மிகப்பெரிய விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது அதிக விற்பனையை எதிர்கெள்ள தயாரகி வருகின்றன. தற்போது விற்பனையாகும் விலையை விட வாகனங்கள் சுமார் 7-9 சதவீதம் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது. இதில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபமும் குறையாது. இது மக்களுக்கு நல்ல பலனை தருகிறது. இதனால் இந்த பட்டியலில் உள்ள எந்த வாகனத்தை நீங்கள் வாங்குவீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள். நீங்கள் எதிர்பாரத்த எந்த வாகனம் தற்போது விலை குறைவாக இருக்கிறது? இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









