ஷோரூமுக்கு வருபவர்களை மேக்னெட் மாதிரி இழுக்குது! இந்த பைக்கை வாங்க எங்கிருந்துதான் கஸ்டமர்ஸ் வர்ராங்கனே தெரியல

உலகளவில் இருசக்கர வாகனங்கள் விற்பனை ஆனது அதிகளவில் பதிவாகும் நாடுகளுள் நமது இந்தியா முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இது கடந்த 2025 ஜூன் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக வழக்கம்போல் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 57 ஆகும். அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 5 ஆயிரத்து 586 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-10 two-wheelers of june 2025

இந்த வகையில் பார்த்தால், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை ஆனது 8.34%, அதாவது 25 ஆயிரத்து 471 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 265 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

அதுவே, 2024 ஜூன் மாதத்தில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 50 ஆயிரத்து 111 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து 3வது இடத்திலும் ஹோண்டாவின் தயாரிப்பான ஷைன் (Shine) உள்ளது.

top-10 two-wheelers of june 2025

2024 ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 674 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 218 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்த வகையில் பார்த்தால், ஷைன் பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 19 ஆயிரத்து 456 யூனிட்கள் குறைந்துள்ளது.

இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ள டிவிஎஸ் ஜூபிட்டர் (TVS Jupiter) மற்றும் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) கடந்த ஜூன் மாதத்தில் முறையே 1 லட்சத்து 7 ஆயிரத்து 980 யூனிட்களும், 1 லட்சத்து 878 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2024 ஜூன் மாதத்தில் இவை முறையே 72,100 மற்றும் 89,941 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-10 two-wheelers of june 2025

இவற்றிற்கு அடுத்து இந்த வரிசையில் 6வது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகள் உள்ளன. கடந்த மாதத்தில் மொத்தமாக 88 ஆயிரத்து 452 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து பெரிய இடைவெளி உடன் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) வெறும் 51 ஆயிரத்து 555 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த டாப்-10 வரிசையில் கடைசி மூன்று இடங்களில் முறையே டிவிஎஸ் அப்பாச்சி (41,386), டிவிஎஸ் எக்ஸ்.எல் (33,349) மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (29,172) உள்ளன.

OEM Jun'25 Jun'24 Diff Growth (%)
Hero Splendor 3,31,057 3,05,586 25,471 8.34%
Honda Activa 1,83,265 2,33,376 -50,111 -21.47%
Honda Shine 1,43,218 1,62,674 -19,456 -11.96%
TVS Jupiter 1,07,980 72,100 35,880 49.76%
Hero HF Deluxe 1,00,878 89,941 10,937 12.16%
Suzuki Access 51,555 52,192 -637 -1.22%
Bajaj Pulsar 88,452 1,11,101 -22,649 -20.39%
TVS Apache 41,386 37,162 4,224 11.37%
TVS XL 33,349 40,397 7,048 -17.45%
Royal Enfield Classic 350 29,172 24,803 4,369 17.61%

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலராக விளங்கும் ஹீரோ ஸ்பிளெண்டரின் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதேபோல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையும் அதிகரிக்கும் என நாம் எதிர்பார்த்த நிலையில், ஆக்டிவாவின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. இதில் இருந்து, புதிய ஸ்கூட்டர்களுக்கு மக்கள் கவனம் கொடுக்க ஆரம்பித்து இருப்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 21, 2025, 23:20 [IST]
English summary
Top 10 two wheelers which sold most in june 2025 in india check all details here
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X