வெறும் ரூ1 லட்சத்திற்கு இவ்வளவு சூப்பரான பைக் எல்லாம் இருக்குதா?

இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக 125 சிசி செக்மெ்டில் பைக்குகள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் சமீபகாலத்தல் இந்த செக்மெண்டில் பல அப்டேட்கள் வந்துள்ளன. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பலர் புதிதாக வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பட்டியலில் உள்ள வாகனங்கள் நிச்சயம் பலன் தரும்.

ஹோண்டா எஸ்பி 125

ஹேண்டா நிறுவனம் தனது எஸ்பி 125 பைக்கில் 123.94 சிசி ஏர்கூல்டு இன்ஜின் இன்ஜினை கொண்டுள்ளது. இது 10.9 எச்பி பவரையும் 10.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மாசு கட்டுப்பாட்ட்டிற்கு ஏற்றார் போல உருவாக்கப்பட்டுள்ளுது. இதில் ப்ளூடூத் உடன் கூடிய 4.2 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் இருக்கிறது. இந்த வாகனம் ரூ93,247 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Top 5 125cc Bikes

டிவிஎஸ் ரைடர் 125

டிவிஎஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு தனது ரைடர் 125 பைக்கை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதலே இந்த செக்மெண்டில் இந்த பைக் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்த பைக்கில் 124.8 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 11.4 எச்பி, 11.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் எல்சிடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் இரண்டு விதமான ரைடு மோடுகள் உள்ளன. அதன்படி எக்கோ மற்றும் பவர் ஆகிய மோடுகள் உள்ளன. மோடிற்கு ஏற்றார் போல ரெவ் லிமிட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ1 முதல் ரூ1.02 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Top 5 125cc Bikes

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கை பொருத்தவரை 124.7 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இது 11.5 எச்பி பவரையும், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.

பஜாஜ் பல்சர் 125

பஜாஜ் நிறுவனம் கிளாசிக் வடிவமைப்பில் பல்சர் 125 பைக்கை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக் குறைந்த விலையில் சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 124.4 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 11.8 எச்பி பவரையும் 10.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. இ்த பைக் ரூ85,178 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Top 5 125cc Bikes

பஜாஜ் பல்சர் என்125

பல்சர் 125 மற்றும் பல்சர் என்125 ஆகிய இரண்டு பைக்குகளும் கிட்டத்தட்ட ஒரே பெயரில் இருந்தாலும், என்125 முற்றிலுமாக வேறு பைக்காக தயாரிக்கப்படுகிறது. இந்த பைக் புதிய டிசைன் மொழி, புதிய இன்ஜின் உடன் உருவாக்கியுள்ளது.

இந்த பைக்கில் 125 சிசி இன்ஜின் இருந்தாலும் இது 12 எச்பி பவரையும் 11என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் செக்மெண்டிலேயே அதிக பவர் தரும் இன்ஜின் இது தான். இது ஸ்மூத்தான ரைடிங் அனுபவத்தை வழங்கும். இந்த பைக் ரூ93,158 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 125 சிசி செக்மெண்டில் சிறப்பாக இந்த 5 பைக்குகள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் இந்த பைக்குகளை வாங்கும் எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படி இருந்தால் இதில் எந்த பைக்கை வாங்குவீர்கள் என கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, August 10, 2025, 19:30 [IST]
English summary
Top 5 125cc bikes under 1 lakh india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X