2025இல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்! பலர் இவி பக்கம் போக காரணமானவை!

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சந்தையானது கடந்த சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. சந்தையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj), ஹீரோ (Hero), ஓலா (Ola) மற்றும் ஏத்தர் (Ather) போன்ற முன்னணி நிறுவனங்கள் விற்பனையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2025ஆம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், அதிக பேட்டரி திறன் மற்றும் மலிவு விலையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தப் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது. இதோ, 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விவரங்கள்.

டிவிஎஸ் ஆர்பிட்டர் (TVS Orbiter): இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, தனது மிக மலிவான ஆர்பிட்டர் இ-ஸ்கூட்டரை 2025 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 158 கிமீ தூரம் வரை செல்லும். இது ஆறு வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

top-5 electric scooters launches in india

இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.06 லட்சமாகும். இதில் 3.1 kWh பேட்டரி பேக், 2.5kW BLDC மோட்டார், டெலஸ்கோபிக் ஃபோர்க், இரட்டை ஷாக் அப்சார்பர்கள், அலாய் சக்கரங்கள், டியூப்லெஸ் டயர்கள், SBS பிரேக்கிங் சிஸ்டம், முழு LED விளக்கு அமைப்பு மற்றும் 'ஸ்மார்ட் எக்ஸோனெக்ட்' (SmartXonnect) வசதியுடன் கூடிய கலர் எல்சிடி திரை மற்றும் நேவிகேஷன் வசதிகள் உள்ளன.

ஓலா எஸ்1 புரோ பிளஸ் பாரத் செல் (Ola S1 Pro Plus Bharat Cell): ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எஸ்1 புரோ பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த 2025ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் 4680 பாரத் செல் பேட்டரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 320 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.

top-5 electric scooters launches in india

அதிகப்பட்சமாக 13 kW ஆற்றலுடன், மணிக்கு 130 கிமீ வேகத்தை எட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.54 லட்சம் ஆகும். இரட்டை சேனல் ஏபிஎஸ், இரட்டை டிஸ்க் பிரேக்குகள், TFT திரை, மல்டி-மோட் டிராக்‌ஷன் கண்ட்ரோல், சென்சார்கள் கொண்ட இரட்டை-வயர் பிரேக் தொழில்நுட்பம், 5.2 kWh பேட்டரி பேக், க்ரூஸ் கண்ட்ரோல், ஓலா மேப்ஸ், ஜியோஃபென்ஸ் போன்ற சிறப்பம்சங்கள் இந்த இ-ஸ்கூட்டரில் இடம்பெறுகின்றன.

பஜாஜ் சேத்தக் 3001 (Bajaj Chetak 3001): பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது மிக மலிவு விலையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சேத்தக் 3001 -ஐ ரூ.1.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதில் 3.0 kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 127 கிமீ தூரம் வரை செல்லும்.

top-5 electric scooters launches in india

சேத்தக் 3001 இ-ஸ்கூட்டரில் பயணம் குறித்த விபரங்களைக் காட்டும் கலர் எல்சிடி திரை, 35 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் (விளக்குகளுடன்), மியூசிக் கண்ட்ரோல், 'கைடு மீ ஹோம்' விளக்குகள், மொபைல் போன் அழைப்பு ஏற்க/மறுக்கும் வசதி மற்றும் ஐந்து கலர் ஆப்ஷன்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

ஹீரோ விடா வி.எக்ஸ்2 கோ 3.4 kWh (Hero Vida VX2 Go 3.4 kWh): 3.4 kWh பேட்டரி உடன் கிடைக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா வி.எக்ஸ்2 கோ, இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இ-ஸ்கூட்டர் ஆகும். 2025 நவம்பர் மாத விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தை ஹீரோ விடா பிடிக்க இந்த ஸ்கூட்டர் பெரிதும் உதவியது.

top-5 electric scooters launches in india

இதன் பெரிய 3.4 kWh பேட்டரி ஆனது ஸ்கூட்டரில் இருந்து நீக்கக்கூடியது ஆகும். இது அதிகபட்சமாக 142 கிமீ ரேஞ்சையும், மணிக்கு 70 கிமீ டாப்-ஸ்பீடையும் வழங்குகிறது. இதன் விலை ரூ.84,800 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட ட்ரம் பிரேக்குகள், ரைடு மோடுகள் (ஈக்கோ, ரைடு), பேட்டரிக்கு ஐபி67 ரேட்டிங், 12 அங்குல அலாய் சக்கரங்கள், 4.3 எல்சிடி, முழு LED விளக்குகள், நேவிகேஷன் மற்றும் ஐந்து கலர் ஆப்ஷன்கள் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றன.

ரிவர் இண்டி ஜென் 3 (River Indie Gen 3): பெங்களூருவைச் சேர்ந்த உள்நாட்டு எலெக்ட்ரிக் வாகன பிராண்டான ரிவர், 2025ஆம் ஆண்டில் புதிய இண்டி ஜென் 3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தலைமுறை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.46 லட்சம் ஆகும். இதில் 4kWh பேட்டரி பேக் உள்ளது.

top-5 electric scooters launches in india

இது அதிகபட்சமாக 163 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 90 கிமீ உச்சப்பட்ச வேகத்தில் செல்லும் இந்த இ-ஸ்கூட்டர், 6.7 kW (9 bhp) உச்ச ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நகர்ப்புற போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், 0 முதல் 40 கிமீ/மணி வேகத்தை வெறும் 3.7 வினாடிகளில் எட்டிவிடும். சிறிய பொருட்களை வைத்து எடுத்து செல்வதற்கான பாக்ஸ், 21 லிட்டர் பூட் ஸ்பேஸ், ஓட்டுனர் கால் வைக்க சௌகரியமான தட்டையான தளங்கள், 14 அங்குல அலாய் சக்கரங்கள் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த 2025ஆம் ஆண்டிலும் பல புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் சிறந்த ஐந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 12, 2025, 23:59 [IST]
English summary
Top 5 electric scooters launches in 2025 tvs orbiter and bajaj chetak 3001
மேலும்... #electric scooter #Year Ender 2025 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X