122 வருடத்தில் இப்படி நடந்தது இல்ல! மேட்-இன்-இந்தியா பைக்குகளுக்கு உலகளவில் பயங்கர டிமாண்ட்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனத்தின் பைக்குகள் விற்பனை ஆனது ஒவ்வொரு வருடமும் சீரான வேகத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில் ஒருபடி மேலே சென்று இதுவரையில் இல்லாத அளவிற்கு, பைக்குகள் விற்பனையில் டிரையம்ப் நிறுவனம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இதற்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிரையம்ப் ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் (Scrambler 400X) பைக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் பைக் உற்பத்தி நிறுவனமான டிரையம்ப் சுமார் 122 ஆண்டுகால வரலாற்றை கொண்டது. அந்த அளவிற்கு பழமையான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டிரையம்ப் தனது பைக்குகளை நம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்கிறது. இருப்பினும், ஒரு வருடத்தில் 1 லட்சம் பைக்குகள் விற்பனை என்கிற மைல்கல்லை டிரையம்ப் நிறுவனம் எட்டாமல் இருந்து வந்தது.

triumph motorcycles achieved record sales

இந்த நிலையில், டிரையம்ப் நிறுவனத்தின் அந்த குறை கடந்த 2024ஆம் ஆண்டில் பூர்த்தி ஆகி உள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டில் வெற்றிக்கரமாக பைக்குகள் விற்பனையில் 1 லட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கடந்துள்ளது. கடந்த ஆண்டில் டிரையம்ப்பில் இருந்து உலகளவில் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 635 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

122 ஆண்டுகால டிரையம்ப் நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு வருடத்தில் இத்தனை டிரையம்ப் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டதே கிடையாது. இதற்கு முந்தைய 2023ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த 2024இல் டிரையம்ப் பைக்குகள் விற்பனை 64 சதவீதமும், 2019ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 123 சதவீதமும் அதிகரித்துள்ளது.

triumph motorcycles achieved record sales

அதாவது, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் டிரையம்ப் பைக்குகள் விற்பனை ஆனது அப்படியே டபுள் மடங்காக அதிகரித்துள்ளது. விற்பனையில் டிரையம்ப் நிறுவனம் கடந்த சில வருடங்களில் அடைந்திருக்கும் இந்த பெரிய வளர்ச்சிக்கு சமீபத்தில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் முக்கிய காரணமாக விளங்குகின்றன.

2023ஆம் ஆண்டின் மத்தியில், இந்த பைக்குகளை இங்கிலாந்தில் இருந்து டிரையம்ப் நிறுவனம் வெளியீடு செய்திருப்பினும், இந்த ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்குகள் முக்கியமாக இந்தியாவை டார்க்கெட் செய்தே கொண்டுவரப்பட்டன. இதனால்தான், உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட 1 மாதத்திற்குள் இந்த பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

triumph motorcycles achieved record sales

மேலும், இந்த விலை குறைவான பைக்குகளை இந்தியாவில்தான் டிரையம்ப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இதற்கிடையில், கடந்த 2024ஆம் ஆண்டில் உலகளவில் டி.எஃப் 250-எக்ஸ் மோட்டோகிராஸ் மற்றும் டிஎஃப் 450-ஆர்சி என 2 புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை டிரையம்ப் ஈர்த்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1 வருடத்தில் 1 லட்சம் பைக்குகள் விற்பனை உண்மையில் பெரிய எண்ணிக்கை ஆகும். இதற்கு இந்திய பைக் மார்க்கெட் மிக முக்கிய பங்களித்துள்ளது என்றால் அது மிகையில்லை. மேலும், இதற்கு டிரையம்ப்பின் சமீப கால வியாபார யுக்தியும் ஒரு காரணமாகும். ஏனெனில், டிரையம்ப் நிறுவனம் வழக்கமான விலைமிக்க பைக்குகளுக்கு மாற்றாக அதிகளவில் விலை குறைவான பைக்குகளை புதியதாக உருவாக்கி அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 0:15 [IST]
English summary
Triumph motorcycles achieved record sales since 122 year history
மேலும்... #triumph motorcycles #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X