2 மாருதி கார்கள் வாங்குற விலையில் பைக்கா!! பணக்காரர்கள் கூட மாதத்தவணையில் தான் வாங்குவார்கள்!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். பல லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்குகளை விற்பனை செய்யும் டிரையம்ப், இந்திய சந்தையிலும் அதன் பைக்குகளை விற்பனை செய்கிறது. ஆரம்பத்தில் விலையுயர்ந்த பைக்குகளை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துவந்த டிரையம்ப் நிறுவனம், கடந்த 2023ஆம் ஆண்டில் குறைந்த விலையில் இரு 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்து இந்திய மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. விலை குறைவான டிரையம்ப் பைக்குகளாக இருப்பினும், அவற்றின் விலைகள் ஏறக்குறைய ரூ.3.5 லட்சமாக உள்ளன.
இருப்பினும், அந்த 400சிசி பைக்குகளுக்கு ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து அவ்வாறான விலை குறைவான மற்றும் குறைந்த பவர்ஃபுல்லான பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கும் டிரையம்ப் நிறுவனம் அதற்கிடையில், விலைமிக்க பைக்குகளையும் அவ்வப்போது அறிமுகம் செய்து, பணக்கார கஸ்டமர்களையும் கவர முயற்சிக்கிறது.

அந்த வகையில் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள விலை மற்றும் ஆற்றல்மிக்க டிரையம்ப் பைக், 2025 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எஸ் (Speed Triple 1200 RS) ஆகும். டிரையம்ப் நிறுவனம் உருவாக்கும் நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked-streetfighter) ரக பைக்கான ஸ்பீடு ட்ரிபிள் பல்வேறு விதமான என்ஜின்கள் உடன், பல்வேறு விதமான விலைகளில் உலகளவில் பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
அவற்றுள், விலைமிக்க டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் பைக், ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எஸ் ஆகும். இதன் புதிய மேம்படுத்தப்பட்ட 2025 வெர்சன் மாடலுக்கு ரூ.20.39 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் முன்பு விற்பனையில் இருந்த முந்தைய தலைமுறை ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக்கின் விலையை காட்டிலும் ரூ.2.44 லட்சம் அதிகம் ஆகும்.

விலை ரூ.2.44 லட்சம் அதிகப்படுத்தப்பட்டு இருப்பினும், இப்போதும் டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக் ஆனது அதன் போட்டி மாடல்களான டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Ducati Streetfighter V4) மற்றும் கேடிஎம் 1390 சூப்பர் ட்யூக் ஆர் (KTM 1390 Super Duke R) உள்ளிட்டவற்றை காட்டிலும் விலை குறைவானதாகவே உள்ளது.
புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக்கில் அப்டேட்கள் பைக்கின் மெக்கானிக்கல் பாகங்களிலும், எலக்ட்ரானிக் பாகங்களிலும் கொண்டுவரப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்த தோற்றத்தில் 2025 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எஸ் பைக் வழக்கம்போல் ஷார்ப்பான மற்றும் முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக உள்ளது. இதற்கேற்ப 2025 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எஸ் பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, முழுவதும் கருப்பு நிறத்தில் அல்லது ஸ்போர்டியான கிரே & சிவப்பு கலந்த நிறத்தில் அல்லது கிரே & மஞ்சள் கலந்த நிறத்தில் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக்கை வாங்கலாம். இவற்றுடன், முன்பை காட்டிலும் எடை குறைவான அலாய் சக்கரங்கள் உடன் 2025 ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் பைக்குகளின் விலைகள் அதிகமாக இருப்பினும், அவற்றிற்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுக்கவே உள்ளது. ஆதலால், பக்காவான பிரிட்டிஷ்-ஸ்டைல் நேக்டு-ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கை வாங்க விரும்புபவர்கள் புதிய 2025 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக்கை வாங்கலாம். விலை ரூ.2.44 லட்சம் அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கு ஏற்ப இந்த பைக்கில் ஏகப்பட்ட அப்டேட்கள் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளன.
Source: Auto Hindustan Times (https://auto.hindustantimes.com/)


Click it and Unblock the Notifications









