2.78 லட்ச ரூபா பைக்கில் லான்ச் கன்ட்ரோல் வசதியா!.. பைக் காதலர்களை திக்குமுக்காட செஞ்சுட்டாங்க..
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் (TVS), அதன் 2025 அப்பாச்சி ஆர்ஆர் 310 (2025 Apache RR 310) பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2.78 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, லான்ச் கன்ட்ரோல் (Launch Control) மற்றும் 8 ஸ்போக்குகளைக் கொண்ட அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றனர்.
ஆறு விதமான தேர்வுகளில் இந்த பைக்கை இந்தியர்களால் வாங்கிக் கொள்ள முடியும். மூன்று வழக்கமான ட்ரிம்களாகவும், மற்ற மூன்று ஆர்டரின் பேரில் கட்டப்பட்டு வழங்கப்படும் (Built-to-Order) ட்ரிம்களாகவும் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டைனமிக் கிட் (Dynamic Kit), டைனமிக் ப்ரோ கிட் (Dynamic Pro Kit) மற்றும் ரேஸ் ரெப்ளிகா (Race Replica) ஆகிய பெயர்களிலேயே பில்ட்-டூ-ஆர்டர் ட்ரிம்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்த ட்ரிம்மில் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை வாங்குகையில் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதிக காசுக்கு ஏற்ப பைக்கின் லுக்கும் அதிக கவர்ச்சியான மற்றும் அதிக ஸ்போர்ட்டி தோற்றம் கொண்டதாக மாறிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இது அனைத்தைக் காட்டிலும் லான்ச் கன்ட்ரோல் அம்சம் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பதே பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த அம்சம் அதிக வேகத்தை விரைந்து குறைக்கவும், விரைவான ஆக்சலரேஷனைப் பெற உதவியாக இருக்கும். மிக மிக விலை உயர்ந்த பைக்குகளில் மட்டுமே இடம் பெற அம்சம் இது ஆகும்.
இந்த அம்சத்தையே அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் வழங்கி இருக்கின்றனர். இத்துடன், கூடுதலாக பலமொழிகளைச் சப்போர்ட் செய்யும் வசதிக் கொண்ட புதிய தலைமுறை ரேஸ் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இவை அனைத்தையும் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.
எஞ்சின் விஷயத்திலும் லேசான மாற்றங்களை டிவிஎஸ் நிறுவனம் செய்திருக்கின்றது. ஓபிடி-2பி தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 9,800 ஆர்பிஎம்மில் 37.48 பிஎச்பி ஆற்றலையும், 7,900 ஆர்பிஎம்மில் 29 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கிவிட்டன. ஆனால், டெலிவரி எப்போது தொடங்கும் என்பது பற்றிய விபரம் கிடைக்கவில்லை. விரைவில் இதன் டெலிவரி பணிகள் நாட்டில் தொடங்கிவிடும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் கிடைக்கும் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக ஸ்போர்ட்டி லூக் கொண்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் பக்கம் இந்தியர்களை வளச்சு போடும் விதமாக தற்போது 2025 வெர்ஷன் நாட்டில் புதிய அம்சங்களுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








