ராயல் என்பீல்டு கதையை முடித்து கட்ட போகும் டிவிஎஸ்! இனி மொத்த கூட்டமும் இந்த பைக் மேலதான் பைத்தியமா இருக்கும்!
இந்திய சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் அட்வென்ஜர் ரக பைக்குகளை (Adventure Bikes) விற்பனை செய்து வருகின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450), யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure), ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 (Hero Xpulse 210) மற்றும் கேடிஎம் 250 அட்வென்ஜர் (KTM 250 Adventure) போன்றவை எல்லாம், இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள அட்வென்ஜர் ரக பைக்குகள் ஆகும்.
இந்த பட்டியலில் டிவிஎஸ் (TVS) நிறுவனத்தின் பைக்குகள் எதுவும் இல்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம், டிவிஎஸ் நிறுவனம் ஒரு அட்வென்ஜர் ரக பைக்கை கூட தற்போது விற்பனை செய்வதில்லை. ஆனால் இந்த குறை இன்னும் ஒரு சில நாட்களில் நிவர்த்தியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 15ம் தேதி, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஏடிவி (TVS Apache RTX 300 ADV) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் அட்வென்ஜர் ரக பைக் ஆகும்.
அத்துடன் புதிய RT-XD4 இன்ஜின் பயன்படுத்தப்படவுள்ள முதல் பைக்கும் கூட இதுதான். இது 299 சிசி சிங்கிள் சிலிண்டர் யூனிட் ஆகும். அதிகபட்சமாக 9,000 ஆர்பிஎம்மில் 34.50 பிஹெச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 28.50 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியையும் இது கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்கும், பின் பகுதியில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதி என இரண்டு பகுதிகளிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன் பகுதியில் விண்டுஷீல்டு, சற்றே உயர்த்தப்பட்ட வகையிலான ஹேண்டில் பார்கள், 2 பீஸ் இருக்கை மற்றும் லக்கேஜ் ரேக் போன்றவை எல்லாம் இந்த பைக்கின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.
இவை எல்லாம் தவிர, டிஎஃப்டி டிஸ்ப்ளே, ரைடு மோடுகள் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஏடிவி பைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள மிகவும் பிரபலமான அட்வென்ஜர் ரக பைக்குகளுக்கு எல்லாம், இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அடிக்கடி தொலை தூர பயணங்களை மேற்கொள்ள கூடிய நபர்கள் மற்றும் ஆஃப் ரோடு சாகச பயணங்களில் அதிக ஆர்வம் கொண்ட நபர்கள் போன்றவர்கள் எல்லாம் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 ஏடிவி அட்வென்ஜர் பைக்கை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். இது அட்வென்ஜர் ரக பைக் என்பதால், ஆன் ரோடில் மட்டுமல்லாது, ஆஃப் ரோடிலும் எத்தகைய கடினமான நிலப்பரப்புகளையும் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








