விலையும் கம்மி! அம்சங்களும் அதிகம்! டிவிஎஸ் கம்பெனியின் புதிய பைக் மத்த வண்டியை விட பெஸ்டா?
டிவிஎஸ் நிறுவனம் நேற்று தனது அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 அட்வெஞ்சர் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் ரூ1.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இநத் பைக் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரம் ஹைவேயிலும் சிறப்பா வெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நேரடியாக கேடிஎம்250 அட்வெஞ்சர் மற்றும் மற்றும் யெஸ்டி அட்வெஞ்சர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.இந்த பைக்குகளின் ஒப்பீட்டை தான் இங்கே காணப்போகிறோம்.
ஸ்டைலிங் மற்றம் அம்சங்கள்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 அட்வெஞ்சர் பைக் சாலையில் செல்லும் போது ரோவு பிரசென்ஸ் சிறப்பாக இருகு்கிறது. ஷார்ப்பான லைட்டில், ஸ்லீக்கான செமி ஃபேரிங் .ள்ளிட்ட மு்சங்கள் உள்ளது. இது போக இதில் உள்ள ஸ்டீல் டிரெல்லியன் ஃபிரேம் எக்ஸ்போஸ் செய்யும் வகையில் உள்ளது. இது போக இதில் டிரான்ஸ்பரென்ட் விண்ட் ஸ்கிரீன்,ஹேண்ட் கார்டு, ஸ்கல்ப்டட் ஃப்யூயல் டேங்க், மெட்டல் பிரஷ் பிளேட் ஸ்பிளிட் சீட், மேல் பக்கம் உள்ள எக்ஸாஸ்ட்.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டது ஆஃப்ரோடு, ஆன்ரோடு என இரண்டு பயன்பாட்டிற்கும் ஏற்ற டயர்கள் தான். இது பைக்கின் ரக்கட் லுக்கை மேலும்படுத்துகிறது. இந்த பைக் பியர்ல் ஒயிட், லைட்டனிங் பிளாக், மெட்டாலிக் ப்ளூ, வைப்பர் கிரீன், மற்றும் டார்ன் பிரான்ஸ் ஆகிய 5 விதமான கலர் ஆப்னுன்களில் கிடைக்கிறது. இதன் முன்பக்கம் உள்ள யூஎஸ்டி ஃபோர்க் கோல்டு ஃபினிஷில் வருகிறது.
இதற்கு போட்டியாக விற்பனையாகும் யெஸ்டி அட்வெஞ்சர் பைக் ஓல்டு ஸ்கூல் வைபில் வடிவமைக்கப்பட் வாகனம் ஆகும். இதன் முன்பக்கத்தில் வட்ட வடிவ ஹெட்லைட்டுகள் உள்ளன. முன்பக்க ஃபென்டர்கள் சற்று உயரமாக வழங்கப்பட்டுள்ளது. இது போக ஃபோர்க் கெயிட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் கடந்த ஜூன் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டது. இதில் புதிய கலர் ஆப்ஷன்கள், பெரிய விண்ட் ஸ்கிரீன், அகலமான ஹேண்டில் பார்கள், ஸ்பிளிட் சீட் மேலே உயர்த்தி வைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

கேடிஎம் 250 அட்வெஞ்சர் பைக்கை பொரத்தவரை போல்டான லுக்கி்ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷார்ப்பான எல்இடி ஹெட்லைட் டிஆர்எல் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய விண்ட் ஸ்கிரீன், சிங்கிள் ஸ்டெப் அப் சீட், பைக்கிற்கு கீழே வழங்கப்பட்டுள்ளுது. கலர் ஆப்ஷனை பொருத்தவரை எலெக்ட்ரானிக் ஆரஞ்ச் மற்றும் செராமிக் ஒயிட் நிற ஆப்ஷன்கள் உள்ளன.
பெர்ஃபார்மென்ஸ்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பைக்கை பொருத்தவரை 299.1 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு டிஓஎச்சி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது36 பிஎஸ் பவரையும், 28.5 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த பைக் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல், பை டைரக்ஷனல் குவிக் ஸ்விஃப்டர்கள், மேம் மிரரிங், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் லிவர், ஆகிய அம்சங்களுடன் 4 ரைடு மோடுகள் உள்ளன. அர்பன், ரெயின், டூர், ரேலி ஆகிய மோடுகள் உள்ளன.

யெஸ்டி அட்வெஞ்சர் பைக்கை பொருத்தவரை 334 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதுஆ 29.6 எச்பி பவரையும், 29.56 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன்இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல் சஸ்டம் உள்ளது. ஏபிஎஸ் அமைப்பில் ரெயின், ரோடு, மற்றும் ஆஃப்ரோடு ஆகிய அம்சங்கள் உள்ளது.
கேடிஎம் 250 அட்வெஞ்சர் பைக்கை பொருத்தவரை 249.07 சிசி சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஎச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 31 பிஎஸ் பவரையும், 25 என்எம் டார்க் தறினையம் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த பைக் ரைடு பை ஒயர் தொழிற்நுட்பம், க்விக் ஸ்விஃப்டர் பிளஸ், ஆஃப்ரோடு ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை
டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 பைக்கை பொருத்தவரை தற்போது ரூ1.99 லட்சத்திற்கு பேஸ் வேரியன்டும், டாப் வேரியன்ட் ரூ2.14 லட்சம் என்ற விலையில் பில்டு டூார்டர் வேரியன்ட் ரூ2.34 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இதுவே யெஸ்டி பைக்கை பொருத்தவரை ரூ1.98 லட்சம் என்ற விலையிலும், கேடிஎம்250 பைக் ரூ2.40 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்கள் மத்தியில் இந்த 250 பைக் செக்மெண்ட் வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் பலர் இந்த ரக பைக்கை அதிகம் ரசித்து வருகின்றனர். இந்த பைக் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில் இந்தபைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த ஒப்பீடு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









